மும்பை நிழல் உலக தாதா சோட்டா ராஜன் கொரோனா பாதிப்பால் மரணமடைந்துள்ளார்.
நிழல் உலக தாதா சோட்டா ராஜன் மீது கொலை பணம் பறிப்பு உள்ளிட்ட 70 வழக்குகள் உள்ளன. பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த மும்பை நகரத்தையே அச்சுறுத்தி வந்த சோட்டா ராஜன் இந்தோனேசியாவின் பாலியில் தலைமறைவாக இருந்து வந்தார்.
கடந்த 2010ஆம் ஆண்டு அங்கிருந்து நாடு கடத்தப்பட்டதை தொடர்ந்து, கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். ராஜனுக்கு பத்திரிகையாளர் ஜோதிர்மோய் டே கொலை வழக்கில் கடந்த 2011ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் சோட்டா ராஜன் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டதும், பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. கொரோனாவால் அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த 26ஆம் திகதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா சிறப்பு சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இதய நோய், நீரிழிவு மற்றும் சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களும் ராஜனுக்கு இருந்ததால் அவற்றால் பெரிதும் அவதிப்பட்டு வந்தார். இதில் கொரோனாவும் சேர்ந்ததால் உடல்நிலை மிக மோசமடைந்து கவலைக்கிடமான நிலையில் இருந்தார்.
மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து சிகிச்சை பெற்றும் வந்தும், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.




