பொலிஸ் என கூறி கொள்ளையிட்டவர்கள் கைது!

Date:

வவுனியாவில் கடந்தவாரம் பொலிசார் என தெரிவித்து 30 பவுண் நகை கொள்ளையிடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேர் வவுனியா பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வவுனியாநகர் மற்றும் தேக்கவத்தை பகுதிகளில் உள்ள வீடுகளிற்கு சென்ற இனம் தெரியாத நபர்கள், தங்களை பொலிசார் என கூறியுள்ளனர்.

பின்னர் வீட்டில் சோதனைசெய்வது போல பாசாங்கு செய்துவிட்டு இருவீடுகளில் இருந்தும் 30 பவுண் தங்க ஆபரணங்களை களவாடிக்கொண்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இது தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற நிலையில் பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

அதற்கமைய குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூன்று பேரை வவுனியா பொலிசார் இன்று கைதுசெய்துள்ளனர். அவர்களில் ஒருவர் ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் என்று கூறப்படுகின்றது.

மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது

spot_imgspot_img

More like this
Related

வெளிநாட்டுக்கு தப்பியோடிய நீதிமன்ற உத்தியோகத்தர்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான சலிந்து மல்சித...

நாமலுக்கு விளக்கமறியல்!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை...

மட்டு கிரான் குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி கவிழ்ந்த விபத்தில் இரு மீனவர்கள் உயிரிழப்பு ஒருவர் உயிருடன் மீட்பு

மட்க்களப்பு கிரான்குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி பாரிய அலையில் சிக்கி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்