26.4 C
Jaffna
March 29, 2024
கிழக்கு

நிரந்தர இருப்பிடத்தை கோரி செங்கலடி – சவுக்கடி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு- ஏறாவூர்ப் பற்று செங்கலடி- சவுக்கடி கரையோரப் பிரதேசத்தில் அரசாங்க காணிகளில் சட்டவிரோதமாக குடியமர்ந்துள்ளவர்கள் தமக்கு சட்டபூர்வ ஆவணம் வழங்ககப்படவேண்டுமெனக்கோரி இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்பிரதேசத்திலுள்ள அரசாங்க காணிகளில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் காடுவெட்டி குடிசையமைத்து 24 குடும்பங்கள் வாழ்ந்துவருகின்றன.

இவர்கள் சட்டபூர்வ அனுமதிப்பத்திரம்கோரி பல தடவைகள் விண்ணப்பம் செய்தபோதிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையே இச்சட்டவிரோத குடியிருப்பாளர்களை அவ்விடத்திலிருந்து அகன்று செல்லுமாறு ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலகத்தினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் பிரதேச செயலாளர் என். வில்வரெத்தினம் கருத்துத் தெரிவிக்கையில் . குடியிருப்பதற்கு காணியற்றவர்கள் நீண்டகாலமாக அரசாங்க காணிகளில் வீடமைத்து குடியிருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு சட்டபூர்வ ஆவணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அந்த வகையில் இக் குடியிருப்பாளர்களுக்கு சட்டபூர்வ அனுமதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

மருதமுனை மதரஸாவில் கொடூரம்!

Pagetamil

கல்முனையில் தமிழர்களுக்கு எதிரான அநீதி: மீண்டும் வெடித்தது போராட்டம்!

Pagetamil

ஆற்றில் குதித்த திருடன்: ட்ரோன் உதவியுடன் தேடுதல்!

Pagetamil

‘மணல் கொள்ளையில் ஈடுபடாதீர்கள்’: ஐ.தே.க நிர்வாகிகளுக்கு ஆலோசனை!

Pagetamil

Leave a Comment