சிரேஷ்ட ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி மறைவு

Date:

சிரேஷ்ட ஊடகவியலாளரும், ‘ஞாயிறு தினக்குரல்’ மற்றும் தினக்குரல் இணையத்தின் முன்னாள் ஆசிரியருமான இராஜநாயகம் பாரதி இன்று (09) காலமானார்.

கடந்த சில வாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தினக்குரல் பத்திரிகையின் பிரதம ஆசிரியராக பணியாற்றிய அன்னார், அரசியல் ஆய்வு மற்றும் கலைச் செயற்பாடுகளில் முக்கிய பங்காற்றியிருந்தார். மேலும், அண்மையில் வீரகேசரி பத்திரிகையின் யாழ்ப்பாணம் காரியாலய பொறுப்பு அதிகாரியாகவும் பணியாற்றியிருந்தார்.

அன்னாரின் மறைவு ஊடகத் துறைக்கு பேரிழப்பாகும் என நண்பர்கள், உறவினர்கள், ஊடகவியலாளர்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் ஏட்டிக்குப்போட்டியாக திலீபன் நினைவு நிகழ்வு

தியாகதீபம் திலீபன் அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் மட்டக்களப்பு காந்தி பூங்காவில்...

மயக்க மருந்து கொடுத்து சிறுமியை சீரழித்த பேருந்து நடத்துனர்!

தனியார் பேருந்து நடத்துநர் ஒருவர், டியூஷன் வகுப்பிற்குச் சென்று கொண்டிருந்த 15...

உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் பிரதேச சபையின் முயற்சி

நிந்தவூர் – 09 பகுதியில் அமைந்துள்ள வவ்வாளோடை களப்பை நீர்வாழ் உயிரின...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்