மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது பாடசாலை மாணவன் காணாமல்போன சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றைய தினம் (08) நண்பகல், கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது அலைகளின் வேகத்தால் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், மாணவன் காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகிறது.
காணாமல் போன மாணவர், காத்தான்குடி நூறாணியா வித்தியாலயத்தில் தரம் 9ல் கல்வி கற்கும் சாமில் சனாஹி என்பவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்ததும், கடற்படையினர், மீன்பிடி துறைமுக அதிகாரிகள், மற்றும் பொலிஸார் இணைந்து மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை மாணவனை அடையாளம் காண முடியவில்லை என்பதோடு, கடலில் நிலவும் வானிலை காரணமாக தேடுதல் பணிகள் சிரமத்துக்குள்ளாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்



