பாதசாரி கடவையில் ரோஸ்மேரியை பந்தாடிய பிரதேசசெயலாளர்!

Date:

மாத்தறை பொது மருத்துவமனைக்கு முன்னால் உள்ள பாதசாரிகள் கடக்கும் வெள்ளைக்கோடு இடத்தில், அக்குரெஸ்ஸ பிரதேச செயலாளர் ஓட்டி வந்ததாகக் கூறப்படும் உத்தியோகப்பூர்வ வாகனம மோதியதில் 40 வயதுப் பெண் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளதாக மாத்தறை தலைமையக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த விபத்து, 27ஆம் திகதி மாலை சுமார் 4.00 மணியளவில் நிகழ்ந்துள்ளது. வீதியைக் கடந்து சென்ற அப்பெண், அருகிலுள்ள சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளார்.

விபத்தில் காயமடைந்த பெண், தெனியாயவைச் சேர்ந்த சின்னசாமி ரோஸ்மேரி என்ற 40 வயதுப் பெண் ஆவார். இவர் மாத்தறை பொது மருத்துவமனையில் தனியார் உதவியாளராகப் பணிபுரிகிறார்.

அந்த வேலையில் சம்பாதிக்கும் பணத்தைக் கொண்டு அவர் மிகவும் சிரமப்பட்டு தனது குடும்பத்தை நடத்தி வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

விபத்தில் அவரது கால் மற்றும் தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது மாத்தறை பொது மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும், இந்த விபத்து தொடர்பாக அக்குரெஸ்ஸ பிரதேச செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

காதலனுடன் சேர்ந்து வருங்கால கணவரை கொன்றது எப்படி? – போலீஸாரிடம் நடித்துக் காட்டிய சியா கோயல்

மகாராஷ்டிர மாநிலம் புனே நகரைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்​டேட் தொழில​திபர்...

ஆற்றில் மிதந்த கூலிப்படை உறுப்பினரின் சடலம்

கின் ஆற்றில், கைகள் பின்புறம் கட்டப்பட்ட நிலையிலும், கால்கள் ஒரு கொங்கிரீட்...

தாக்குதல்களை நிறுத்தி பேச்சை தொடர அமெரிக்கா, ஈரான் இணக்கம்!

ஈரானும் அமெரிக்காவும் சமீபத்திய மோதல்களை நிறுத்தி, ஹோர்முஸ் ஜலசந்தி மீதான தங்கள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்