பல குற்றவாளிகளுக்கு கடவுச்சீட்டு தயாரித்துக் கொடுத்த ஜனாதிபதி செயலக அதிகாரி

Date:

பாதாள உலகக் கும்பல் தலைவர் கரந்தெனிய ராஜுவுக்கு போலி கடவுச்சீட்டு தயாரித்த குற்றச்சாட்டின் பேரில் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்ட, ஜனாதிபதி செயலகத்தின் பாராளுமன்ற விவகாரங்கள் மற்றும் அமைச்சரவைப் பிரிவின் சிரேஷ்ட உதவிச் செயலாளர், பாதாள உலகத் தலைவர் கெஹல்பத்ர பத்மே மற்றும் பிற பாதாள உலகக் குற்றவாளிகள் குழுவிற்கு போலி கடவுச்சீட்டுகளைத் தயாரித்ததாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்படுள்ளது.

அவருக்கு கெஹல்பத்ர பத்மேவுடனும் தொடர்பு இருந்தது தற்போது தெரியவந்துள்ளது.

மேலும், சந்தேகத்திற்குரிய இந்த சிரேஷ்ட உதவிச் செயலாளர், 2023-ஆம் ஆண்டில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் வெளிநாட்டுத் தூதரகப் பிரிவின் பிரதி கட்டுப்பாட்டாளராகப் பணியாற்றியபோது, ​​பாதாள உலகக் குற்றவாளிகளுக்காக இந்தப் போலி கடவுச்சீட்டுகளைத் தயாரித்ததும் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் நேற்று முன்தினம் (27) மாளிககந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பதில் நீதிபதி யசந்த பெரேராவால் நாளை (30) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் குறித்து விசாரித்து வரும் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினர், கொலை செய்யப்பட்ட பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் வேண்டுகோளின் பேரில் சந்தேக நபரான கரந்தெனிய ராஜுவுக்கு போலி கடவுச்சீட்டு தயாரிக்கப்பட்டதாகக் கூறுகின்றனர்.

தெற்கு மாகாணத்தின் மிகவும் மோசமான பாதாள உலகத் தலைவராக அறியப்படும் கரந்தெனிய சுத்தாவின் சகோதரரான கரந்தெனிய ராஜு, கிட்டத்தட்ட 50 கொலைகள் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு சந்தேக நபர் ஆவார்.

போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி துபாயிலிருந்து ஐரோப்பாவிற்குத் தப்பிச் செல்ல முயன்றபோது, ​​ஏப்ரல் 17 ஆம் திகதி இந்திய காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டார்.

பின்னர், இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட கரந்தெனிய ராஜுவிடம் நடத்தப்பட்ட நீண்ட விசாரணையின் போது, ​​அவருக்காக போலி கடவுச்சீட்டைத் தயாரித்த இந்த சந்தேக நபர் குறித்த தகவல் வெளிப்பட்டது. அதன்படி, மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினர் இந்த சந்தேக நபரை கைது செய்து, பின்னர் அவர் கண்டியில் வசிக்கும் ஜனாதிபதி செயலகத்தில் 41 வயதான சிரேஷ்ட உதவி செயலாளர் என்பதை வெளிப்படுத்தினர்.

சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட நீண்ட விசாரணையின் போது, ​​இதே முறையில் போலி கடவுச்சீட்டுகளைத் தயாரித்த பல பாதாள உலகக் குற்றவாளிகள் குறித்த தகவல்கள் வெளிப்பட்டன.

spot_imgspot_img

More like this
Related

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கரூர்...

காதலனுடன் சேர்ந்து வருங்கால கணவரை கொன்றது எப்படி? – போலீஸாரிடம் நடித்துக் காட்டிய சியா கோயல்

மகாராஷ்டிர மாநிலம் புனே நகரைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்​டேட் தொழில​திபர்...

பாதசாரி கடவையில் ரோஸ்மேரியை பந்தாடிய பிரதேசசெயலாளர்!

மாத்தறை பொது மருத்துவமனைக்கு முன்னால் உள்ள பாதசாரிகள் கடக்கும் வெள்ளைக்கோடு இடத்தில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்