ரெலோ இயக்கத்தின் தலைவர் சிறீ சபாரட்ணத்தின் 35வது ஆண்டு நினைவு நாள் நேற்று (5) அனுட்டிக்கப்பட்டது.
அவர், சுட்டுக்கொல்லப்பட்ட கோண்டாவில் கிழக்கில் உள்ள அன்னங்கை தோட்ட வெளியில் நேற்று காலை சிறீரெலோ இயக்கத்தின் முன்னாள் யாழ் மாவட்ட அமைப்பாளர் எஸ்.செந்தூரன் கற்பூரம் கொழுத்தி அஞ்சலி செய்தார்.
கொரோனா நிலமையினை கருத்தில் கொண்டு நினைவு நிகழ்வுகள் தவிர்க்கப்பட்டிருந்தது.
1986ஆம் ஆண்டு மே 5ம் திகதி இதே இடத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் சிறிசபாரத்தினம் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1