இலங்கைக்கு இந்திய அரசாங்கத்திலிருந்து 1032 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கம் அண்டை நாடுகளில் நீர் மின் நிலையங்கள், வீட்டு வசதி, வீதிகள், பாலங்கள் மற்றும் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகள் போன்ற முக்கியமான உள்கட்டமைப்பு திட்டங்களை மேற்கொள்ள பல கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.
இந்நிலையில், இலங்கையில் வீட்டு வசதி, வீதிகள் மற்றும் பாலங்கள் போன்ற பாரிய திட்டங்களுக்காக 1032 கோடி இலங்கை ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வரவு செலவு திட்டத்தின் கீழ், இலங்கைக்கு முன்பு ஒதுக்கப்பட்ட 245 கோடி இந்திய ரூபாய், தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு 300 கோடி இந்திய ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதி ஒதுக்கீடு, இலங்கையின் பொருளாதார மேம்பாட்டில் முக்கிய பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த இந்த ஒத்துழைப்புகள் உதவக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




