பாடசாலை மட்டத்திலும் “க்ளீன் ஸ்ரீலங்கா” திட்டம்

Date:

அரசாங்கம் “க்ளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தை பாடசாலை மட்டத்திலும் முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளது. இதன் கீழ், கல்வித்துறையைச் சேர்ந்தவர்களை பயிற்றுவிப்பதற்கான நிகழ்ச்சி திட்டம் அண்மையில் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் இடம்பெற்றது.

சுகாதாரம், கழிவு முகாமைத்துவம், மாணவர்களின் நடத்தை மற்றும் ஒழுக்கம் ஆகியவை அடிப்படையாகக் கொண்டு இந்த நிகழ்ச்சி திட்டம் அமுல்படுத்தப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மாணவர்கள் சுத்தமாகவும் ஒழுங்காகவும் இருக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து அவர்களுக்கேற்ற பயிற்சிகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக, மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் தெரிவுசெய்யப்பட்ட கல்வித் துறையைச் சேர்ந்த பணியாளர்களுக்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்படுவதோடு, பள்ளிகளின் சூழலை தூய்மையாகவும், பராமரிப்புடன் வைத்திருக்கவும் இந்த திட்டம் முக்கிய பங்கு வகிக்கும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

இந்தியாவிலுள்ள காதலியை தேடி வந்த பாகிஸ்தான் இளைஞன் கைது!

இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு காஷ்மீரை சேர்ந்த காதலியை கரம்​பிடிக்க, பாகிஸ்தானின்...

வேலை வாங்கித்தருவதாக கூறி இளம்பெண்களை பாலியல் கொடுமை செய்த தவெக நிர்வாகிகள் கைது!

வேலை வாங்கித் தருவதாக அழைத்துச்சென்று, இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த தவெக...

அமித்ஷாவுடன் சந்திப்பு… பாஜக தலைவரிடம் இராஜினாமா கடிதத்தை கையளித்த அண்ணாமலை!

பாஜக​வில் இருந்து வில​கு​வ​தாக தேசி​யத் தலை​வர் நிதின் நவீனை டெல்​லி​யில் சந்​தித்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்