இந்தியாவிலுள்ள காதலியை தேடி வந்த பாகிஸ்தான் இளைஞன் கைது!

Date:

இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு காஷ்மீரை சேர்ந்த காதலியை கரம்​பிடிக்க, பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரை சேர்ந்த இளைஞர் எல்லை தாண்டி காஷ்மீருக்​குள் நுழைந்​தார். இந்​திய ராணுவ வீரர்​கள், அவரை சுற்றி வளைத்​துப் பிடித்​தனர்.

பாகிஸ்தான் காஷ்மீரின் முசாப​ரா​பாத் அருகே உள்ள பைன்​காடியை சேர்ந்​தவர் ஜீஷான் அகமது மிர். அவருக்​கும் இந்தியாவின் காஷ்மீரின் உரி அருகே உள்ள துல்​வாரி கிராமத்​தைச் சேர்ந்த இரும் பானுவுக்கும் இடையே சமூக வலை​தளம் வாயி​லாக பழக்​கம் ஏற்பட்​டது. நாளடைவில் இரு​வருக்​கும் இடையே காதல் மலர்ந்​தது. தனது காதலியை சந்​திப்​ப​தற்​காக ஜீஷான் அகமது மிர் பாகிஸ்தான் காஷ்மீரில் இருந்து நேற்று முன்​தினம் காலை இந்திய காஷ்மீரின் உரி மாவட்​டம், சிலிகோட் பகு​திக்​குள் நுழைந்​தார். இந்​திய ராணுவ வீரர்​கள், அவரை சுற்றி வளைத்​துப் பிடித்​தனர்.

ராணுவ வீரர்​களிடம் ஜீஷான் அகமது மிர் அளித்த வாக்​கு மூலத்தில், ”எனது முன்​னோர் காஷ்மீரின் துல்​வாரி கிராமத்​தைச் சேர்ந்​தவர்​கள் ஆவர். அந்த பகு​தியை சேர்ந்​தவர் என்​ப​தால் இரும் பானுவுடன் சமூக வலை​ தளத்​தில் பழக்​கம் ஏற்​பட்​டது. அவரை திரு​மணம் செய்ய எல்லை​யைக் கடந்து இந்​தி​யா​வுக்​குள் நுழைந்தேன். நான் இந்​தி​யா​வில் வாழ விரும்​பு​கிறேன்” என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து காஷ்மீர் போலீ​ஸாரிடம் ஜீஷான் அகமது மிர் ஒப்​படைக்​கப்​பட்​டார். அவரிடம் போலீ​ஸார் தீவிர விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். சம்​பந்​தப்​பட்ட பெண்​ணிட​மும் காஷ்மீர் போலீ​ஸார் விசாரணை நடத்தி வரு​கின்​றனர். இந்த விவ​காரம் தொடர்​பாக மத்​திய உளவு அமைப்​பு​கள்​ தனி​யாக வி​சா​ரணை நடத்​தி வருகின்​றன.

spot_imgspot_img

More like this
Related

பஸ் லலித் விசாரணையில் கக்கியவை!

டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குற்றவாளி லலித் கண்ணங்காரவிடம் நடத்தப்பட்ட...

அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல்

கைதான மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை நாளை...

வதந்திகளையும், பொய்களையும் மட்டும் பேசிய விஜய்!

“சட்டம் - ஒழுங்கு குறித்தும், குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்தும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்