மாதம்பையில் கத்திக்குத்து தாக்குதல் – ஆண் உயிரிழப்பு, பெண் படுகாயம்

Date:

மாதம்பை பழைய நகர் பகுதியில் உள்ள வீடொன்றில், கணவரின் கூரிய ஆயுதத் தாக்குதலில் பெண்ணொருவரும் ஆணொருவரும் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த இருவரும் ஹலாவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று (28) தாக்குதலுக்குள்ளான ஆண் உயிரிழந்துள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலில் காயமடைந்த பெண் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர் மாதம்பை பழைய நகரைச் சேர்ந்த 60 வயதுடைய துஷார தில்ருக்ஷா என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்த நபர், சந்தேகநபரின் மனைவியுடன் சில காலமாக உறவில் இருந்ததாகவும், சம்பவத்தன்று இருவரும் வீட்டொன்றில் தங்கியிருந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சம்பவத்தன்று, தனது மனைவியை வீட்டில் ஆணொருவருடன் காண நேர்ந்த சந்தேகநபர், இருவரையும் கத்தியால் தாக்கி காயப்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீட்டில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் வெட்டிக் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில், மாதம்பை பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று சம்பவ இடத்திற்குச் சென்று காயமடைந்தவர்களை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

நீதிக்கான ஓலம் – சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஒன்றிணையும் தமிழர் தரப்பு

கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் ஏனைய...

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை அவமதித்ததாக குற்றச்சாட்டு – போராட்டத்திற்கு அழைப்பு

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையை களங்கப்படுத்தும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் அரச அதிகாரிகளுக்கு...

நீதியின் ஓலம் போராட்டத்திற்கு அனுமதியளித்த வலி கிழக்கு தவிசாளரிடம் பொலிஸ் தரப்பு விளக்கம் கோரியது

யாழ். செம்மணிப்பகுதியில் இடம்பெறும் நீதியின் ஓலம் 2 போராட்டம்  இனங்களுக்கிடையே அமைதியற்ற,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்