அனுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் 20 வருடங்களுக்கு நீடிக்கும்;

Date:

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஊழலற்ற, மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளது  இந்த அரசாங்கம் 20 வருடங்களுக்கு நீடிக்கும்; அதை யாராலும் வீழ்த்த முடியாது காளி கோவிலை இடித்த ஹிஸ்புல்லா கைது செய்து விசாரணை செய்ய வேண்டும் ஈரோஸ்  (EROS    ) அமைப்பின் செயலாளர் நாயகம் இரா.பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த அரசாங்கம் நிம்மதியாக இலஞ்சம் ஊழல், கொலை கலாச்சாரம் அற்ற நிர்வாக அலகு இந்த நாட்டில் இன்று ஏற்பட்டுள்ளது சில காழ்ப்புணர்ச்சி கொண்ட கொள்ளை கொலைகாரர்கள், இந்த அரசாங்கத்தை கவிழ்த்து கொள்ளைகாரருக்குள் கொண்டு வருவதற்கான முயற்சி நடக்கிறது.எனவே இந்த அரசாங்கத்தை யாராலும் கவிழ்க்க முடியாது  இந்த அரசு 20 வருடத்துக்கு நீடிக்கும் என்பது தான் உண்மை.

கல்முனை வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் சுகுணன் சுகாதார சுற்று நிருபங்கள் படியே செயல்பட்டுள்ளார். இதை சில அரசியல்வாதிகள் பூதாகரமாக்கி கலாச்சாரப் பிரச்சினையாக திசை திருப்பி தமிழ் முஸ்லிம் மக்களிடையே  முறுகலை ஏற்படுத்த கொழுப்பில் இருந்து கொண்டிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் .மற்றும் ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா ஆகியோர் வைத்தியர் சுகுணன் பதவி விலகக் கோருவதற்கு அவர்கள்; யார்?

இதை சில அடிவருடிகள் மற்றும் ஊழல் கொலைகளில் சிறைக்கு செல்லவுள்ளவர்கள் தங்களை பாதுகாப்பற்கு இந்த அரசாங்கத்தை கைப்பற்ற இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கின்றனர் எனவே இந்த இரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எந்தத் தகுதியும் இல்லை.

இந்த வைத்தியர் சுகுணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறும் ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா கடந்த கால் ஆட்சியாளர்களுடன் சேர்ந்து ஓட்டமாவடியில் தமிழ் மக்களின் காளி கோயிலை இடித்து மீன் சந்தை பள்ளிவாசல் கட்டியதுடன்  தனது அதிகாரத்தை வைத்து நீதவானை இடமாற்றம் செய்தமை.

ஏறாவூர் ஐயங்கேணியில் சுப்பிரமணியம் சிவானந்தராஜாவிக்கு சொந்தமான தனியார் காணியான 26 ஏக்கர் காணியை சட்டவிரோதமாக கையகப்படுத்தி பள்ளிவாசல் அமைத்து முஸ்லிம் மக்களை குடியேறியதுடன் புனானையில் தமிழர்களின் 500 ஏக்கர்  காணியை கையகப்படுத்தி பல்கலைக்கழகம் அமைத்துள்ளார். இந்த மோசடிகள் தொடர்பாக புலனாய்வு பிரிவினர் விசாரணை செய்து வெளி கொண்டு வரவேண்டும்.

அதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் சஹ்ரான் ஹிஸ்புல்லா சந்தித்துள்ளார்  இருவருக்கும் என்ன தொடர்பு? சஹ்ரானை சந்தித்து ஒரு மாதத்தில் குண்டு வெடிப்பு இடம் பெற்றுள்ளது இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு செய்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இது தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (சிஜடி) உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும்.

ஹிஸ்புல்லா மற்றும் அவரது சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக அரசாங்கமும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், ஈரோஸ் கட்சி சட்டத்தின் ஊடாக உச்சக்கட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளது.

அதேவேளை கூட்டு சேர்ந்த 6 கட்சி கூட்டுகள் தேர்தல் காலத்தில் மக்களை ஏமாற்றுவதற்கான ஒரு நாடகமாகும். தமிழ் அரசியல் தலைமைகள் மக்களை ஏமாற்றும் அரசியலை முன்னெடுத்து வருகின்றதுடன் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுக்க கூட முடியாத இவர்கள்   கூட்டு என்ற போர்வையில் கிழக்கை முஸ்லிம் காங்கிரசுக்கு தாரைவார்த்து கொடுப்பதற்காகவே  செயற்படுகின்றனர் என்றார்.

spot_imgspot_img

More like this
Related

அமைதியை இழந்த பலாலி மக்கள் வீதிக்கிறங்கிப் போராட்டம் – பலாலியில் குழப்பம்!

தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி அமைதிவழியில்  போராடிவரும் வலி வடக்கு...

நீதிக்கான ஓலம் – சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஒன்றிணையும் தமிழர் தரப்பு

கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் ஏனைய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்