26.5 C
Jaffna
February 6, 2025
Pagetamil
இலங்கை

முல்லைத்தீவில் தூக்கிலிடப்பட்ட நாய்: செல்லமாக வளர்த்த பெண் சொல்லும் கதை; கொடூர பெண்ணுக்கு விளக்கமறியல்!

முல்லைத்தீவு, மாங்குளம் பகுதியில் நாயை தூக்கிட்டு கொலை செய்த பெண் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மதகு வைத்த குளம் பகுதியில் சுமார் 35 குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில் சாந்தரூபன் ஜீவனந்தினி எனும் 53 வயதினையுடைய தாயொருவர் நாயொன்றை கடந்த 4 வருடங்களாக வளர்த்து வந்தார். அதற்கு அவர் சூட்டிய பெயர் மணி.

இந்த நிலையில் மழை நேரத்தில் அருகில் வசிக்கும் இன்னொரு குடும்பம் ஒன்றின் ஆடுகளும் இந்த பகுதியில் மேய்ச்சலுக்கு வருவதுண்டு.

அண்மையில், மேய்ச்சலுக்கு வந்த ஆடுகளை, மணியென்ற நாய் கடித்துள்ளது.

இதனை கண்ட கால்நடை வளர்ப்பாளர், நாய்க்கு எதிராக போலிஸ் நிலையத்தில் 2 தடவைகள் முறைப்பாடு செய்துள்ளார். இறுதியாக செய்த முறைப்பாட்டில் தனது கால்நடைகளை மணி (நாய்) கடித்து விட்டதாகவும் அவை இறந்துவிட்டன எனவும் பதிவு செய்திருந்தார்.

முறைப்பாடுகளை பதிவு செய்த மாங்குளம் போலீசார் விசாரணைகளை இணக்க சபை எனும் கிராம மட்டங்களில் இடம்பெறும் ஆரம்ப நீதிமன்றுக்கு மாற்றியிருந்தனர்.

இணக்க சபைக்கு இரண்டு தடவைகள் விசாரணைகளுக்கு இரு தரப்பும் அழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வசிக்கும் பகுதியிலிருந்து இணக்க சபை விசாரணைக்கு செல்லவேண்டுமாயின் 22 கிலோமீற்றர் செல்லவேண்டுமென மணியின் வளர்ப்பாளர் ஜீவனந்தினி எமக்கு தெரிவித்தார்.

தனது கணவரை இரத்தசுத்திகரிப்புக்காக கொண்டு செல்லவேண்டும் என்ற காரணத்தாலும், வீட்டின் வறுமையை கருத்திற் கொண்டும் இறுதியாக சென்ற விசாரணையில் முழு ஒத்துழைப்பும் நல்குவதாக தெரிவித்துள்ளார்.

இதனைக் கேட்ட கால்நடை வளர்ப்பாளரான பெண், நாயை (மணி) தன்னிடம் தருமாறும் , கால்நடை இழப்புக்கான இழப்பீட்டினை தரவேண்டும் எனவும் இணக்க சபையில் தெரிவித்துள்ளார்.

இழப்பீடு வழங்க பணமில்லாத நாயின் உரிமையாளர், நாயை கால்நடை வளர்ப்பாளரான பெண்ணிடம் தருவதாக ஒப்புதல் தெரிவித்துள்ளார். இணக்கசபை தீர்மான அடிப்படையில் மாலை 5 மணிக்கு முன்னதாக குறித்த பெண்ணிடம் மணியை ஒப்படைக்குமாறும் தெரிவித்துள்ளனர்,

இதனடிப்படையில் தான் எனது வளர்ப்பு பிள்ளையை அவரிடம் கொடுத்தேன், ஆனால் அவர்கள் நாயை கொலை செய்துவிட்டார் என்று அந்த பெண் தெரிவித்தார். மணி தனது வீட்டில் பிள்ளை போல வளர்த்ததாகவும் தமது வீட்டுக்கு அதுதான் காவல் எனவும் அழுகையோடு தெரிவித்தார்.

இதேவேளை, நாயை கொலை செய்த பெண் மாங்குளம் பொலிசாரால் கைது செய்யப்பட்டு, இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். அவர் எதிர்வரும் 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பிரதேச சபைகளுக்கு நிவாரணம்

east tamil

கொஸ்கொட துப்பாக்கி சூட்டின் பிரதான சூத்திரதாரி கைது

east tamil

நீர்க்கட்டணம் குறைப்பு

east tamil

அரச வேலைவாய்ப்புகள் என்ற போர்வையில் தகவல் திருட்டு

east tamil

இன்று முதல் உத்தரவாத விலையில் நெல் கொள்வனவு

east tamil

Leave a Comment