அரசாங்கத்தின் உத்தரவாத விலையில் பெரும்போகத்துக்கான நெல் இன்று முதல் கொள்முதல் செய்யப்படுவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளிடமிருந்து, நெல் சந்தைப்படுத்தல் சபையினூடாக நெல்லை கொள்வனவு செய்வதற்கான விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் கே.டி.லால் காந்த குறிப்பிட்டுள்ளார்.
நெல்லுக்கான உத்தரவாத விலை அரசாங்கத்தால் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, அதற்கேற்ப கொள்முதல் நடவடிக்கைகள் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுகின்றன




