இரத்தினபுரி, எஹெலியகொட தொரணகொட பிரதேசத்தில் அமைந்துள்ள மசாஜ் நிலையம் ஒன்றின் குளியலறையில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
நேற்றைய தினம் (19) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இச் சம்பவத்தில் உயிரிழந்தவர் எஹெலியகொட பரகடுவ பிரதேசத்தை சேர்ந்த 57 வயதுடைய ஆடவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக அவிசாவளை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்திற்கான காரணம் தொடர்பில் சந்தேகங்களை எழுப்பி, மேலதிக விசாரணைகளை எஹெலியகொட பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1