அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் இன்றைய தினம் (20) பதவியேற்கவுள்ளார். வொஷிங்டனில் உள்ள கடுமையான குளிர்கால வானிலை காரணமாக, வழக்கமான கேபிடல் கட்டிட வெளியிட பதவியேற்பு நிகழ்வு மாற்றமடைந்து, ரோட்டுண்டா மண்டபத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதென்று ட்ரம்ப் தனது சமூக ஊடகங்கள் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.
இந்த மாற்றம் 1985ல் ரொனால்ட் ரீகனின் பதவியேற்பு நிகழ்வுக்குப் பிறகு முதல் முறையாக நடைபெறுகிறது. தனது இரண்டாவது பதவியேற்பு நிகழ்வில், ட்ரம்ப் பைபிளை கை வைத்து சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார். அவருடன் இரண்டாவது துணை ஜனாதிபதியாக ஜே.டி. வான்ஸ் பதவியேற்கவுள்ளார்.
ட்ரம்ப் மற்றும் மெலனியா ட்ரம்ப் ஆகியோரை, பதவி விலகும் ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் ஜில் பைடன் அழைத்துச் செல்வார்கள். 2020 தேர்தலில் ஜோ பைடனிடம் தோல்வியடைந்த ட்ரம்ப், 2024 தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பதவி ஏற்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.