அன்புச்செல்வஊற்று அறக்கட்டளையின் ஸ்தாபகரான திரு. விஸ்வலிங்கம் அருணகிரி அவர்களின் தாயாரின் ஒருமாத நினைவு தினத்தை முன்னிட்டு, நேற்றைய தினம் (19) அஞ்சலி நிகழ்வு அன்புச்செல்வ ஊற்று அறக்கட்டளை அலுவலகத்தில் நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் அவரின் வாழ்க்கை, தியாகம், மற்றும் சமூக நலத்திற்கு அர்ப்பணித்த பணிகள் நினைவுகூரப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அவரது அன்பு நினைவாக, அவரது நிதியுதவியுடன் சமூக நலத்திற்காக ஒரு சிறப்பு செயற்பாடு என்று கூறத்தக்க வகையில் அன்புவழிபுரம், செல்வநாயகபுரம், பாலையூற்று, மற்றும் வரோதையநகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வாழ்வாதார உதவிகள் தேவைப்படும் 100 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு அடிப்படை உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்த சமூக நிகழ்வை திரு. விஸ்வலிங்கம் அருணகிரி அவர்களின் மருமகனான திரு. ஜனார்த்தன் அவர்கள் முழுமையாக ஒழுங்கு செய்திருந்தார்.
அறக்கட்டளையின் சமூக நலத்திற்கான பங்களிப்புகளை தொடர்ந்து முன்னெடுக்கும் நம்பிக்கையில், இத்தகைய செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.