24.2 C
Jaffna
January 21, 2025
Pagetamil
சினிமா

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நடிகை நிக்கி தம்போலியின் அண்ணன் ஜதின் சிகிச்சை பலனின்றி உயிரிழ

ஈசியான கேள்விகளுக்கு பதில் சொல்லி மிகப்பெரிய பரிசுகளை வெல்லலாம்
கொரோனாவால் உயிரிழந்த தன் அண்ணனை நினைத்து இன்ஸ்டாகிராமில் உருக்கமாக போஸ்ட் போட்டுள்ளார் நடிகை நிக்கி தம்போலி.

ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நிக்கி தம்போலி. ஏற்கனவே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவரின் 29 வயது அண்ணன் ஜதினுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்கள். சுமார் 20 நாட்களாக மருத்துவமனையில் இருந்த ஜதினுக்காக பிரார்த்தனை செய்யுமாறு நிக்கி தன் ரசிகர்களை கேட்டுக் கொண்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஜதின் நேற்று காலை உயிரிழந்தார்.

 

தன் அண்ணனுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு நிக்கி தம்போலி கூறியிருப்பதாவது, கடவுள் உன் பெயரை சொல்லப் போகிறார் என்பது எங்களுக்கு தெரியாமல் போய்விட்டது. உன் மீது அதிக அன்பு வைத்திருந்தோம், இனியும் அப்படித் தான். உன்னை இழந்தது எங்கள் இதயங்களை நொறுங்க வைத்துவிட்டது. நீ தனியாக செல்லவில்லை. எங்களின் ஒரு பகுதியையும் எடுத்துச் சென்றுவிட்டாய் என்றார்.

கடவுள் உன்னை அழைத்துக் கொண்டபோது எங்களிடம் அழகிய நினைவுகளை விட்டுச் சென்றிருக்கிறாய். உன் அன்பு தான் எங்கள் வழிகாட்டி. உன்னை எங்களால் பார்க்க முடியாது என்றாலும் எப்பொழுதும் எங்கள் அருகில் தான் இருப்பாய். யாருக்கும் குட்பை சொல்லவில்லை. யாரும் உணரும் முன்பே சென்றுவிட்டாய். அது ஏன் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும். உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவோம். அதிகமாக அழுவோம் என்கிறார் நிக்கி.

அன்பு மட்டுமே உன்னை காப்பாற்றியிருக்கும் என்றால், நீ இறந்திருக்க மாட்டாய். ஒரு நாள் மீண்டும் சந்திப்போம். நீ பூமியில் இருந்தபோது எங்களுக்கு அண்ணனாக உன்னை கொடுத்ததற்காக கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். உன்னை ஒருபோதும் மறக்க மாட்டோம். உன் ஆத்மா சாந்தியடையட்டும் என தெரிவித்துள்ளார். நிக்கி தம்போலியின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

நிக்கி தம்போலியின் அண்ணன் மட்டும் அல்ல நடிகை பியா பாஜ்பாயின் சகோதரரும் கொரோனா பாதிப்பால் நேற்று உயிரிழந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட தன் சகோதரருக்கு மருத்துவமனையில் பெட்டும், வென்டிலேட்டரும் ஏற்பாடு செய்து கொடுக்க முடியுமா என பியா ட்விட்டரில் கேட்டார். அந்த ட்வீட் போட்ட இரண்டு மணிநேரத்தில் தன் சகோதரர் இறந்துவிட்டதாக தெரிவித்தார் பியா என்பது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரவி மோகன் – ஆர்த்தி தம்பதி விவாகரத்து வழக்கு: நீதிபதியின் உத்தரவு என்ன?

Pagetamil

பாலையாவுடன் நடன சர்ச்சை: ஊர்வசி ரவுதெலா விளக்கம்

Pagetamil

பிரபல நடிகர் சயிப் அலிகான் மீது வீடு புகுந்து தாக்குதல்

east tamil

‘பகவந்த் கேசரி’ ரீமேக்தான் ‘விஜய் 69’ – உடைந்த ரகசியம்

Pagetamil

விபத்தில் சிக்கிய அஜித்தின் நலம் குறித்து ஆர்வம் காட்டிய அருண் விஜய்

east tamil

Leave a Comment