வெருகல் காணி பிரச்சினை தொடர்பில் உறுதியளித்துள்ள அருண் ஹேமச்சந்திரா

Date:

வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 32041.66 ஏக்கர் காணிகளில் பெருமளவான பகுதிகள், வனஜீவராசிகள் திணைக்களத்தினால் 1970 மற்றும் 1986ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலிற்கு பின்னர் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கு முற்பட்ட காலங்களில் மக்கள் அப்பகுதிகளில் குடியிருந்ததாகவும் குறித்த காணிகளை மீளவும் ஒப்படைக்குமாறும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 10 கிராம சேவகர் பிரிவுகளில் 7 கிராம சேவகர் பிரிவுகள் முழுமையாகவும், 3 பிரிவுகள் பகுதியளவிலும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளன.

இப்பகுதிகளில் மக்களுக்குரிய விவசாய நிலங்களும் குடியிருப்பு பகுதிகளும் உள்ளடங்குகின்றன என பிரதேச செயலாளர் நேற்று முன்தினம் (17) நடைபெற்ற வெருகல் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் போது கையகப்படுத்தப்பட்ட 19643.59 ஏக்கர் நிலங்களை விடுவிக்க கோரிக்கை விடுத்தார்.

இந்நிலங்களில், 3526 காணி அனுமதி பத்திரங்களும், 1002 அளிப்பு பத்திரங்களும் வழங்கப்பட்ட நிலையில், நில அளவைத் திணைக்களம் எந்த சந்தர்ப்பத்திலும் இது வனஜீவராசிகள் திணைக்களத்திற்குரியது எனக் குறிப்பிட்டு தகவல் அளிக்கவில்லை. இதனால் மக்களுக்கான நில ஆவணங்கள் வழங்கப்பட முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும், வனவள பாதுகாப்பு திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்ட 11906.35 ஏக்கர் நிலங்களில், 3261.58 ஏக்கர் நிலம் விடுவிக்க கோரப்பட்ட நிலையில், இதுவரை 1001.52 ஏக்கர் நிலம் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

இதனடிப்படையில், இம் மாத இறுதியில் நடைபெறவுள்ள காணி தொடர்பான துணைக்குழு கூட்டத்தில் இது தொடர்பில் தீர்வு எடுக்கப்படும் என பிரதேச ஒருங்கிணைப்புத் தலைவர் மற்றும் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா அவர்கள் உறுதியளித்துள்ளார்.

இந்த கலந்துரையாடலில், வனஜீவராசிகள் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளின் விடுவிப்பு, தொல்லியல் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள காணி. நாதனோடை அணைக்கட்டு, கல்லரிப்பு – பனிச்சங்குளம் கால்வாய், இலங்கைத்துறை, புன்னையடி, கல்லடி பகுதிகளில் இடம்பெற்றுவரும் படகுப்பாதை போக்குவரத்து உள்ளிட்ட 11 விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பிரதேச ஒருங்கிணைப்புத் தலைவர் மற்றும் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, பாராளுமன்ற உறுப்பினர்கள் சண்முகம் குகதாசன், இம்ரான் மஹ்ரூப், பிரதேச செயலாளர் எம்.என்.எம். அனஸ், உதவி பிரதேச செயலாளர்கள், அரச அதிகாரிகள், மற்றும் பொதுமக்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

spot_imgspot_img

More like this
Related

திருகோணமலையில் 2 தமிழ் பெண்கள் கடத்தல் விவகாரம்: கடற்படையின் 2 பெண் உத்தியோகத்தர்கள் கைது!

திருகோணமலையில் 2008-ஆம் ஆண்டு சசிகுமார் தென்மொழி மற்றும் மேரி டெல்ஷியா ஆகிய...

மன்னிப்பு வழங்குமாறு அநுரவிடம் கெஞ்சும் ஞானசாரர்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2019 இல் தனக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி...

னோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்காகத் தீவிர முயற்சி

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்