இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச இடையே முக்கிய பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றது.
இந்த சந்திப்பில், இலங்கை-இந்தியா இடையிலான பன்முக ஒத்துழைப்பு, வளர்ச்சித் திட்டங்கள், முதலீடுகள், பொருளாதார மறுமலர்ச்சி போன்ற முக்கிய துறைகள் குறித்து இருதரப்பும் விரிவாகக் கலந்துரையாடினர்.
இதேவேளை, பல ஆண்டுகளாக இரு நாடுகளுக்கிடையே நிலவி வரும் உறவை இன்னும் வலுப்படுத்தவும் பராமரிக்கவும், இருதரப்பின் உற்சாகத்துடன் கருத்துகள் பரிமாறப்பட்டதாக நாமல் ராஜபக்ச தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பு இலங்கை-இந்தியா உறவை மேம்படுத்தும் முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1