Pagetamil
இலங்கை

கிளிநொச்சி விபத்தில் படுகாயமடைந்திருந்த தாயும் உயிரிழப்பு!

கிளிநொச்சி நகரில் கடந்த டிசம்பர் 25 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்திருந்த தாயும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் ரக வாகனம் மோதி இடம்பெற்ற இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகாயமடைந்திருந்த நிலையில், சம்பவத்தன்றே இரண்டு வயது குழந்தை உயிரிழந்திருந்தது.

தந்தை தாய் மற்றும் மகள் ஆகியோர் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (3) தாயும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவத்தில் சாவகச்சேரி கல்வயல் பகுதியைச் சேர்ந்த 34 வயதான பெண்ணே உயிரிழந்ததுடன், தந்தையும் மூத்த மகளும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மதுபோதையில் டிப்பரை செலுத்தி சென்ற சாரதி இந்த விபத்தை ஏற்படுத்தியிருந்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வடக்கு கிழக்கில் புராதன பௌத்த தளங்களை பாதுகாக்க விசேட திட்டங்கள் – புத்தசாசன அமைச்சர்

east tamil

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

Pagetamil

இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

Pagetamil

புதிய வடிவில் TELL IGP மற்றும் l-need சேவைகள்

Pagetamil

யாழில் மீளவும் சோதனைச் சாவடிகள்: பொது பாதுகாப்பின் மேல் புதிய கேள்விகள்

east tamil

Leave a Comment