நேற்றைய தினம் (02.01.2025) திருகோணமலை நகராட்சி மன்றம் தனது சேவையை விஸ்தரிக்கும் முகமாக 2025 ஆம் ஆண்டினை முன்னிட்டு விஷேட படையணி (Revenu, Disaster and Development Task force) ஒன்றினை செயலாளர் ஜெயவிஷ்ட்ணு தலைமையில் ஒழுங்கமைத்து நகராட்சி மன்றத்தின் சேவைகளை மற்றும் முறைப்பாடுகளை பார்வையிட்டனர்.
இதன்போது மன்றத்துக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் மற்றும் வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள தரிப்பு நிலையம், காந்திநகர், அனுராதபுர சந்தி சந்தை, அணுமதியற்ற கட்டிடம், பூங்காக்கள் மற்றும் வீதியோர கடைகள் தொடர்பான முறைப்பாடுகள் பொது மக்களின் வேண்டுகோளுக்கிணங்க பலதரப்பட்ட இடங்களை சென்று பார்வையிட்டு அதற்கு உடன் தீர்வு பெறும்வகையில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1