இந்திய மீனவர்களுக்காக விளக்கமறியல் மேலும் நீடிப்பு

Date:

எல்லை தாண்டி வடமராட்சி கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள், கடற்படையினரின் கடமையின் போது இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்களுக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இழுவைப் படகில் தடைசெய்யப்பட்ட இழுவைமடியைப் பயன்படுத்தி எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட போது கடந்த வருடம் நவம்பர் 11 ஆம் திகதி வடமராட்சி கடற்பகுதியில் வைத்து கடற்படையினரால் 12 காரைக்கால் மீனவர்கள் கைதுசெய்யப்பட்டு நவம்பர் 13 ஆம் திகதி பருத்தித்துறை நீதிமன்றில் நீரியல்வளத் துறை அதிகாரிகளினால் முற்படுத்தப்பட்டனர்.

குறித்த கைதின் போது கடற்படை அதிகாரிகளைத் தாக்கி கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் படகிற்கு சேதம் ஏற்படுத்தியிருந்தமை தொடர்பில் கடற்படையினரால், பருத்தித்துறை காவல் நிலையத்தில் பிறிதொரு முறைப்பாடும் பதிவுசெய்யப்பட்டது.

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நீரியல்வளத் திணைக்களத்தினரால் தொடரப்பட்ட வழக்கில் கடந்த நவம்பர் 27 ஆம் திகதி 12 இந்திய மீனவர்களும் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும் கடற்படையினரைத் தாக்கியமை தொடர்பில் பருத்தித்துறை காவல்துறையினரால் தொடரப்பட்ட வழக்கில் மீனவர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

குறித்த வழக்கு நேற்று (01) பருத்தித்துறை நீதிமன்றில் நீதவான் கிரிசாந்தன் பொன்னுத்துரை முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது மீனவர்கள் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர். ஆகவே இந்திய மீனவர்கள் மீதான குற்றப் பத்திரத்தினை தாக்கல் செய்யுமாறு நீதவான் பருத்தித்துறை காவல்துறையினருக்கு பணித்துள்ளதுடன் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

எதிர்வரும் 8 ஆம் திகதி சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய பருத்தித்துறை பொலிஸாரால் குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

மட்டு கிரான் குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி கவிழ்ந்த விபத்தில் இரு மீனவர்கள் உயிரிழப்பு ஒருவர் உயிருடன் மீட்பு

மட்க்களப்பு கிரான்குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி பாரிய அலையில் சிக்கி...

மட்டக்களப்பில் மீனவர் நலன் கருதி அபிவிருத்தி குழு கூட்டத்தில் எம்.பி மார் பேசுவதில்லை என ஈ.பி.டி.பி.கட்சி அந்தனிசில் ராஜ்குமார் குற்றச்சாட்டு

மட்டக்களப்பு நகரை அண்டிய பகுதிகள் மற்றும் கரையோர பிரதேசங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும்...

மட்டு நெடியமடுவில் பாலம் அமைக்க நீர் எடுக்க வெட்டிய பாதுகாப்பற்ற குழியில் 6 வயதுடைய சிறுவன் ஒருவர் தவறி வீழ்ந்து உயிரிழப்பு

மட்டக்களப்பு நெடியமடு பகுதியில் நீர்ப்பாசன திணைக்களம் ஆற்றின் குறுக்கே பாலம் அமைப்பதற்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்