டிப்பர் வாகனம் மோதியதில் பொலிஸார் உயிரிழப்பு

Date:

வீதியில் ஓடிக்கொண்டிருந்த டிப்பர் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது மோதியுள்ளது.

நேற்றைய தினம் (26.12.2024) ஹபரணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹபரணை திருகோணமலை வீதியில் கல்ஓயா பொலிஸ் வீதித்தடைக்கு அருகில் கடமையிலிருந்த பொலீஸ் உத்தியோகத்தர் மீது டிப்பர் வாகனம் ஒன்று மோதியதிமையே குறித்த விபத்துக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, பொலிஸ் உத்தியோகத்தர் டிப்பருடன் முன்னோக்கி இழுத்துச் செல்லப்பட்டு, முன்னால் சென்ற லொறி மற்றும் காருடன் மோதி பலத்த காயங்களுக்கு உள்ளானார். இந்நிலையில், குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் சிகிச்சைக்காக ஹபரனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இடத்தில் பொலிஸார் வாகன சோதனை பணியில் ஈடுபட்டிருந்த போதே இந்த விபத்து நடந்துள்ளது.

விபத்தின் போது மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர், காரில் இருந்த பெண் மற்றும் 4 மாத குழந்தை, லொறியின் சாரதி ஆகியோர் காயமடைந்து ஹபரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் ஹபரணை பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட கல்ஓயா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 56 வயதான கந்தளாய், பதியாகம பிரதேசத்தில் வசித்து வந்த பொலிஸ் சார்ஜன்ட் என்பது தெரியவந்துள்ளது.

இவரது சடலம் பொலன்னறுவை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பேச்சுவார்த்தையில் அமெரிக்கா அளவுக்கு அதிக நிபந்தனைகள் விதிக்கிறது: ஈரான் தகவல்!

இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், பாகிஸ்தானில் ஈரானிய மற்றும் அமெரிக்க...

ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடி அகற்றலுக்கான ஏற்பாடுகள் ஆரம்பம்: அமெரிக்க இராணுவம்

ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான "சூழ்நிலைகளை அமைக்கும்" பணியைத் தொடங்கியுள்ளதாகவும், இரண்டு...

ஹோர்முஸ் நீரிணையை கடந்த அமெரிக்க போர்க்கப்பல்கள்!

ஈரானுடனான போர் தொடங்கியதிலிருந்து முதல் முறையாக, இரண்டு அமெரிக்கப் போர்க்கப்பல்கள் ஹோர்முஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்