மதுசாலைகளை மூடக் கூறி கண்டன பேரணி

Date:

கிளிநொச்சியில் (Kilinochchi) அதிகரித்துள்ள மதுபானசாலைகளை மூடுமாறு கோரி கண்டன பேரணி ஒன்று இன்று (24-12-2024) முன்னெடுக்கப்பட்டது.

இப் பேரணியில் குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பசுமைப்பூங்கா முன்றலில் இருந்து ஆரம்பமாகிய இப் பேரணி, கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இப்போராட்டத்தின் போது அதிகரித்த மதுபான சாலைகளை மூடுமாறும் கோரி கிளிநொச்சி மாவட்டத்தின் சிவில் சமூக அமைப்புகள், மதத் தலைவர்கள் மற்றும் வர்த்தக சங்கத்தினர் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் பெண்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

பேரணியை தொடர்ந்து ஜனாதிபதிக்கு கையளிப்பதற்கான மகஜர் ஒன்றும் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரனிடம் கையளிக்கப்பட்டமை  குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

ஐநூறு போதை மாத்திரைகளுடன் சிஜடியினரால் யாழில் இருவர் கைது

யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்,...

செம்மணி புதைகுழி விவகாரம்: ராஜ் சோமதேவவின் விளக்கங்கள் குறித்து சுயாதீன ஆய்வு கோரும் அமெரிக்கத் தமிழர் அமைப்பு!

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழிகள் தொடர்பாகப் பேராசிரியர் ராஜ் சோமதேவ முன்வைத்துள்ள...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்