Pagetamil
சினிமா

ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்து செய்தி

இப்போதெல்லாம், கோலிவுட் திரையுலகில் பிரபலங்களின் விவாகரத்து செய்திகளே அதிகம் வருகின்றன.

அவ்வாறு வந்த செய்திகளில் இரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது தான் ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்து செய்தி.

இச்செய்தி தொடர்பாக ஜெயம்ரவியால் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, நிறைய சர்ச்சைகள் எல்லாம் எழுந்தன, ஆனால் உடனே அதனை தெளிவுப்படுத்தி இருந்ததோடு, “சினிமா குறித்து என்ன வேண்டுமானாலும் கூறுங்கள் நான் மதிக்கிறேன், ஆனால் எனது சொந்த வாழ்க்கை பற்றி பேச யாருக்கும் உரிமை இல்லை” என்று கூறியிருந்தார்.

குடும்ப நல நீதிமன்றத்தில் ஜெயம் ரவி விவாகரத்திற்கு வழக்கு தொடர்ந்த இருவரையும் மனம்விட்டு பேச குடும்பநல நீதிமன்றம் அறிவுரை வழங்கியதனடிப்படையில், இருவரும் நீதிமன்றத்தின் ஆஜரான நிலையில் சமாதான பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.

மீண்டும் இருவருக்கும் இடையே சமாதான பேச்சு வார்த்தை நடக்க, மத்தியஸ்தர் தரப்பிலிருந்து சமரச பேச்சு வார்த்தை முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே மீண்டும் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இணைய வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.

தற்போது இந்த வழக்கின் விசாரணை, ஜனவரி 18ஆம் தேதிக்கு தள்ளிவைத்து குடும்ப நல நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பாலையாவுடன் நடன சர்ச்சை: ஊர்வசி ரவுதெலா விளக்கம்

Pagetamil

பிரபல நடிகர் சயிப் அலிகான் மீது வீடு புகுந்து தாக்குதல்

east tamil

‘பகவந்த் கேசரி’ ரீமேக்தான் ‘விஜய் 69’ – உடைந்த ரகசியம்

Pagetamil

விபத்தில் சிக்கிய அஜித்தின் நலம் குறித்து ஆர்வம் காட்டிய அருண் விஜய்

east tamil

‘த கோட்’ படத்தால் மன அழுத்தம்: நடிகை மீனாட்சி சவுத்ரி வருத்தம்

Pagetamil

Leave a Comment