காட்டு யானை தாக்கி கடற்படை உத்தியோகத்தர் பலி

Date:

பூனாவ கடற்படை முகாமில் கடமையாற்றும் 41 வயதுடைய கடற்படை உத்தியோகத்தர் ஒருவர் காட்டு யானை தாக்கியதில் நேற்றிரவு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் இலங்கை கடற்படையின் லெப்டினன்ட் கொமாண்டர் என்றும் நிட்டம்புவ பகுதியை சேர்ந்தவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடற்படை உத்தியோகத்தர் அருகிலுள்ள கடையொன்றில் உணவுப் பொதியை வாங்கிக்கொண்டு முகாமுக்குத் திரும்பிக் கொண்டிருந்த போதே யானைத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

எல் நினோ தாக்கம்: மஹா பருவ விவசாயத்தில் பாதிப்பு ஏற்படும் அபாயம் — ஐ.நா. எச்சரிக்கை

சாய்ந்தமருது பிரதேசத்தில் ஆட்டிறைச்சியை நாய் இறைச்சி எனக் குறிப்பிட்டு சமூக ஊடகங்களிலும்,...

2027 துப்பாக்கி உரிமம்: புதுப்பிப்பு நாளை முதல்

2027ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி உரிமங்களைப் புதுப்பிக்கும் நடவடிக்கை நாளை (செப்டம்பர் 1)...

பிரபல தென்னிந்திய நடிகை அபிராமி பங்கேற்ற பிரமாண்ட போட்டி நிகழ்ச்சி

மணமகள் அலங்காரம், ஆரி வேலைப்பாடு, தையல், மருதாணி அலங்காரம் மற்றும் கேக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்