மாவட்ட விவசாயிகள் இன்று திங்கட்கிழமை (31) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
தற்போது ஏற்பட்டுள்ள காலநிலையினால் மாவட்டத்தில் பெரும் வறட்சி ஏற்பட்டுள்ளதுடன் விவசாய குளங்களில் இருந்து நீர் மட்டம் வரலாறு காணமுடியாதளவிற்கு நீர் குறைந்துள்ளது
இந்த நிலையில் மாவட்டத்தில் 65 வீதமான மக்கள் விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வருகின்ற போதிலும் 40 வீதமான விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசனம் வழங்கப்படுகின்றது. இந்த மாவட்டத்தில் பெரிய குளமான உன்னிச்சைக் குளத்தில் இருந்து விவசாயத்துக்கு நீர்பாசனம் வழங்கப்படுகின்றதுடன் இந்த குளத்தில் இருந்து மாவட்டத்திலுள்ள மக்களுக்கு குடிநீரை நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை நீரை பெற்று வருகிறது
இதனால் விவசாயத்திற்கான நீரை பெற முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர் . இந்த நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை ஒரு இலாப நோக்கு நிறுவனம். ஆனால் இலாபத்திற்காக ஒரு மாவட்டத்தின் உணவு உற்பத்தியும் எதிர்கால தலை முறையையும் பலி கொடுக்க முடியாது.
இரணைமடுவில் விவசாயிகள் ஒன்றுபட்டு எதிர்த்த பின்னர் விவசாய குளங்களில் கை வைக்காதீர்கள் என்ற பாடம் கிடைத்தது. அதை தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் கடல் நீர் சுத்திகரிப்பு, வுனியாவில் தனி குடிநீர் நீர் தேக்கமும் அமைக்கப்பட்டு குடிநீருக்கு தனி கொள்கையும், விவசாயத்திற்கு தனி கொள்கையும் பின்பற்றப்படுகின்றது
ஆனால் மட்டக்களப்பில் மட்டும் ஏன் இந்த இரட்டை நீதி? இங்கு 65 வீதமான மக்கள் விவசாயத்தை நம்பியுள்ளனர் ஆனால் 40 வீதமான விவசாய நிலங்களுக்கு மட்டும் நீர்ப்பாசனம் வழங்கப்படுகின்றது. இவ்வாறு இருக்கையில் உன்னிச்சைக் குளத்தில் இருந்து ‘குடிநீர்’ என்ற பெயரில் சகல தேவைகளுக்கும் நீர் வழங்கல் சபை நீரை உறிஞ்சுகிறது.
இதனால் விவசாயிகளின் விவசாயம் யால, மகா போகங்கள் தண்ணீரின்றி அழிவு, வெள்ள காலத்தில் விவசாயிகள் மாத்திரமில்லாமல் கட்டுமானங்களும் அழிவடையும் நிலை, கடன் சுமையில் விவசாயிகளின் இளம் பிள்ளைகளின் கல்வியும் எதிர்காலமும் கேள்விக்குறி, மாவட்ட பொருளாதாரம் சீரழிவு போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறதுடன் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றன.;.
மட்டக்களப்பை சுற்றி கடல் இருக்கிறது. யாழ்ப்பாணத்திற்கு 266 மில்லியன் USD
செலவில் ளுறுசுழு வரலாம் என்றால், மட்டக்களப்புக்கு ஏன் வரக்கூடாது? விவசாய குளங்களில் இருந்து குடிநீர் வழங்குவது அலட்சியம் அல்ல. இது திட்டமிட்ட அநீதி
எனவே அரசியல் பிரமுகர்களும் மக்கள் பிரதிநிதிகளும் உடனே ஒன்றிணைந்து மட்டக்களப்புக்கு ‘டீயவவiஉயடழய ஊழயளவயட ளுறுசுழு Pசழதநஉவ’ ஐ மத்திய அரசிடமும் யுனுடீயிடமும் முன்னெடுக்க வேண்டும். அதேவேளை குடிநீருக்கு தனி திட்டம் வரும் வரை தற்காலிக தீர்வை கூட விவசாய குளங்களை நாடக்கூடாது. ஒரு சொட்டு நீருக்காக கூட விவசாய குளங்களில் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கை வைக்க கூடாது.
இதை செய்ய தவறினால் ‘ஒரு மாவட்டத்திற்கு வளர்ச்சி, மற்ற மாவட்டத்திற்கு வஞ்சம்’ என்ற குற்றச்சாட்டில் இருந்து யாரும் தப்ப முடியாது. என்பதுடன் நீர் வியாபார பொருள் அல்ல. அது உயிர், அது உணவு, அது எங்கள் பிள்ளைகளின் எதிர்காலம். எனவே இவைகளை கவனத்தில் கொண்டு குடிநீருக்கான தனி திட்டம் அமைக்க உடன் நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆளுநர், அரசாங்க அதிபர், நீர் வடிகாலமைப்பு தலைவரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.




