பெண்கள், சிறுவர்களை இலக்காகக் கொண்ட ஆபாச Facebook குழுக்கள் முடக்கம்

Date:

பெண்கள் மற்றும் சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்யும் வகையில் ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பகிரும் Facebook கணக்குகள் மற்றும் குழுக்களை முடக்குவதற்கு இலங்கை பொலிஸார் அவசர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நடவடிக்கை, பொலிஸ் கணினி குற்ற விசாரணைப் பிரிவின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுக்கப்படுகிறது.

இதனுடன் தொடர்பாக, பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகத்தைத் தடுக்கும் பணியக அதிகாரிகள், பெலியத்த பகுதியில் 21 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளனர். பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான ஆபாசப் படங்கள் மற்றும் உள்ளடக்கங்களைப் பகிரும் Facebook குழுக்களை அவர் நடத்தி வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரின் கையடக்கத் தொலைபேசி பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

சட்டவிரோதமான இதுபோன்ற சமூக ஊடக கணக்குகள் மற்றும் குழுக்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புகார்கள் வழங்க:
📧 சமூக ஊடகங்களில் தொந்தரவு அல்லது மன உளைச்சலை ஏற்படுத்தும் உள்ளடக்கம்: ccid.report@police.gov.lk
📧 தனியுரிமையை மீறும் அந்தரங்க புகைப்படங்கள்/காணொளிகள்: dri.cid@police.gov.lk
📞 கணினி குற்ற விசாரணைப் பிரிவு: 0112 381 058

spot_imgspot_img

More like this
Related

உயர் நடுத்தர வருமான நாடாக இலங்கை: தடுப்பூசிகளுக்கான சலுகைகள் இழப்பு!

உலக வங்கியின் புதிய வருமான வகைப்பாட்டின் கீழ் இலங்கை உயர் நடுத்தர...

நடமாடும் ஏவுதளத்திலிருந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்த ரஷ்யா

வடமேற்கு அர்காங்கெல்ஸ்க் பகுதியில் உள்ள ப்ளெசெட்ஸ்க் விண்வெளி ஏவுதளத்திலிருந்து, நகரும் தன்மையுடைய,...

வாசுதேவ நாணயக்கார இலங்கையின் இடதுசாரி அரசியல் வரலாற்றில் முக்கியமானவர் – பிரதமர் ஹரிணி

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார, இலங்கையின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்