மஸ்கெலியாவில் கடத்தப்பட்ட வாகனம் மாங்குளத்தில் மீட்பு!

Date:

மஸ்கெலிய பொலிஸ் பிரிவில், சுமார் 83 இலட்சம் பெறுமதியான வாகனம் ஒன்று கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் ஹட்டன் வலய குற்ற விசாரணைப் பிரிவினர் ஒருவரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் கொள்ளையிடப்பட்ட வாகனம் மீட்கப்பட்டுள்ளது.

மஸ்கெலியா பிரதேசத்தில் இடம்பெற்ற திருவிழாவொன்றிற்கு கஹவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த சிலரை அழைத்து வந்த இந்த வாகனம், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 9ஆம் திகதி அதிகாலை சிலரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கஹவத்த பொலிஸ் பிரிவில் ஓபேவத்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான சந்தேகநபர் 28 வயதுடைய ஓபேவத்த பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக கடத்தப்பட்ட வாகனம், மாங்குளம், மல்லாவி பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் வலய குற்ற விசாரணைப் பிரிவினர் மற்றும் மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

கணவனுக்கு மன்னிப்பு வழங்கிய ரணிலின் முடிவுக்கு எதிராக மனைவி போர்க்கொடி: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில், பராமரிப்புத் தொகையாக 1.74 மில்லியன்...

பாடசாலை விடுமுறையளிக்கும் முடிவு மாகாண அதிகாரிகளிடம்

மோசமான வானிலை நிலவும் பகுதிகளில் பாடசாலைகளைத் தற்காலிகமாக மூடுவது குறித்து முடிவெடுக்கும்...

கடந்த 24 மணித்தியாலத்தில் புத்தளத்தில் அதிக மழை

கடந்த 24 மணிநேரத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளதாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்