அஜித்தின் புது கெட்டப் வைரல்!

Date:

அஜித் நடித்து வரும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் அவரின் கெட்டப் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த சில நாட்களாக இந்த புகைப்படங்கள் அதிகாரபூர்வமற்று இணையத்தில் பரவி வந்த நிலையில், தற்போது இயக்குநர் ஆதிக் ரவிச்ந்திரன் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார்.

கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான ‘துணிவு’ படத்தின் கெட்டப் ரசிகர்களை கவர்ந்தது. அதில் முழுக்க வெள்ளை தாடி, வெள்ளை முடியுடன் இருந்தார் அஜித். கிட்டத்தட்ட அதன் இன்னொரு வெர்ஷனாக ‘விடாமுயற்சி’யிலும் அதே கெட்டப்பில் இருப்பதாக படக்குழு வெளியிட்ட போஸ்டர்களில் தெரிந்தது. ஆனால், தற்போது அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்து வருகிறார். ‘குட் பேட் அக்லி’ என தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் பெப்பர் சால்ட் லுக்கில் அட்டகாசமாக இருக்கிறார் அஜித். இந்த லுக்கை படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ளார்.

கோட் சூட் அணிந்து கொண்டு ஸ்டைலான அஜித்தின் தோற்றம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. முன்னதாக கையில் டாட்டூவுடன் டி-சர்ட் அணிந்து அஜித்தின் மற்றொரு லுக்கும் அண்மையில் இணையத்தில் வைரலானது. இந்த லுக்கே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ’குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. படம் பொங்கல் பண்டிகையையொட்டி அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

கல்முனை சாஹிரா மாணவன் மாகாண மட்ட நீளம் பாய்தலில் வெண்கலம். தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு

மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான...

தொற்றுநோய் தரவு முகாமைத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில் கல்முனையில் ‘EPINet’ பயிற்சி செயலமர்வு

தொற்று நோய் தொடர்பான தரவுகளை முகாமைத்துவம் செய்வதிலும், பொதுச் சுகாதார சேவைகளின்...

நாடு சார்ந்த மனித உரிமை ஆணைகள் காலவரையின்றி தொடரக் கூடாது – ஐ.நா.வில் இலங்கை வலியுறுத்தல்

நாடு சார்ந்த மனித உரிமை ஆணைகள் காலவரையின்றி தொடர அனுமதிக்கக் கூடாது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்