கட்டாயம் பிரசுரித்து தரவும். நன்றி : அல் மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா கல்வியாளர்களையும் சாதனை மாணவர்களையும் கௌரவித்த ‘PEARLS – SEASON 07’

Date:

அல் மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் ஏற்பாட்டில் வருடாந்தம் முன்னெடுக்கப்பட்டு வரும் கல்வியாளர்களை கௌரவிக்கும் ‘PEARLS – SEASON 07’ கல்விச் சிறப்பு மற்றும் கௌரவிப்பு நிகழ்வு நேற்று (09) சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

கல்வித்துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய கல்வியாளர்களையும், கல்வியில் சாதனை படைத்த மாணவர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், அரச நிர்வாகம், கல்வி, சுகாதாரம், சட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள், பாடசாலை அதிபர்கள், பெற்றோர்கள் மற்றும் சாதனை மாணவர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வை கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினரும், அல் மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் தவிசாளருமான சிரேஷ்ட ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமர் நெறிப்படுத்தினார்.

அல் மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா ஆளுநர் சபைத் தலைவரும், சிலோன் இன்ஸ்டியூட் ஒப் மேனஜ்மென்ட் சயன்சஸ் தவிசாளருமான கலாநிதி அன்வர் எம். முஸ்தபா நிகழ்வுக்குத் தலைமை தாங்கினார்.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் முன்னாள் செயலாளரும், கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு, சமூக நலன்புரிச் சேவைகள் மற்றும் கிராமிய மின்சார அமைச்சின் செயலாளருமான இலங்கை நிர்வாக சேவை மூத்த அதிகாரி எச்.ஈ.எம்.டவலியு.யூ. திசாநாயக்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

கல்முனை கல்வி வலயத்தை இலங்கையின் முன்னணி கல்வி வலயங்களில் ஒன்றாக உயர்த்துவதில் முக்கிய பங்காற்றிய வலயக் கல்விப் பணிப்பாளரும், இலங்கை கல்வி நிர்வாக சேவை மூத்த அதிகாரியுமான எம்.எஸ். சஹதுல் நஜீம் மாண்புறும் அதிதியாகக் கலந்து கொண்டார்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஸஹீலா இஸ்ஸதீன், அக்கரைப்பற்று மற்றும் கல்முனை பிரதேச செயலாளர் ரீ.எம்.எம். அன்சார் நளீமி, காரைதீவு பிரதேச செயலாளர் பொறியியலாளர் ஜீ. அருணன், இறக்காமம் மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். ரசான் நளீமி, கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் உள்ளிட்டோர் கௌரவ அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

மேலும், அரச அதிகாரிகளின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழு உறுப்பினரும், இலங்கை கல்வி நிர்வாக சேவை முதல்தர அதிகாரியுமான ஏ.எல்.எம். முக்தார், கல்முனை சட்டத்தரணிகள் சங்கத் தலைவியும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஆரிகா காரியப்பர், கல்முனை கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபீர், வீதி அபிவிருத்தி அதிகார சபை நிறைவேற்று பொறியியலாளர் இசட்.ஏ. அஸ்மீர் ஆகியோரும் பங்கேற்றனர்.

அத்துடன், ‘கிழக்கின் கேடயம்’ பிரதானியும் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான எஸ்.எம். சபீஸ், மாற்றத்துக்கான சர்வதேச பங்காளிகள் நிறுவனத்தின் சிரேஷ்ட நிகழ்ச்சித் திட்ட ஆலோசகர் ஆசிரியர் றிசாத் செரீப், அல் மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் இளைஞர் தலைவர் அமீர் அப்னான், கல்வி மற்றும் சமூக வலுவூட்டலுக்கான ஒத்துழைப்பு அமையத்தின் நிர்வாகப் பணிப்பாளர் எம்.ஐ.எம். வலீத், பிரதம பொலிஸ் பரிசோதகர் எம்.எம். றபீக், அல் மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா ஆளுநர் சபை உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் போது கல்வித்துறையில் சிறப்பான சேவையாற்றிய கல்வியாளர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், கல்வியில் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்ற சாதனை மாணவர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

கல்வி என்பது சமூகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பிரதான சக்தி என்ற அடிப்படையில், திறமையான மாணவர்களை ஊக்குவிப்பதுடன் கல்வியாளர்களின் அர்ப்பணிப்பான சேவையை சமூக மட்டத்தில் அங்கீகரிக்கும் வகையில் PEARLS நிகழ்வு வருடாந்தம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் பாடசாலை அதிபர்கள், பெற்றோர்கள் மற்றும் பெருமளவான சாதனை மாணவர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட நகைகள் இல்லாமல் வந்த கொண்ட ரஞ்சி

ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட, பிரபல...

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை நிறைவு

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறன்று நாட்டின் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும்...

வெப்பமான வானிலை குறித்து ‘அம்பர்’ எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கை பிரிவினால் வெப்பமான வானிலை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்