தொழிலதிபரின் கட்சியில் இணைந்த மைத்திரியின் மகன்!

Date:

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ராஜிகா விக்ரமசிங்க மற்றும் தஹாம் சிறிசேன ஆகியோர் இன்று (03) தொழிலதிபர் திலித் ஜயவீர தலைமையிலான தாயக மக்கள் கட்சியில் இணைந்துள்ளனர்.

கொழும்பில் உள்ள அக்கட்சியின் கட்சியின் தலைமையகத்தில் ​வைத்து அவர்கள் தாயக மக்கள் கட்சியில் இணைந்து கொண்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம் பிரவேசித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜிகா விக்கிரமசிங்க, தாயக மக்கள் கட்சியின் கேகாலை மாவட்ட மற்றும் தெதிகம அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேநேரம், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேனா, பொலன்னறுவை மாவட்ட தாயக மக்கள் கட்சியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, பொலன்னறுவை மாவட்ட இணைப்பாளராக சமிந்து குமாரசிங்கவும், கண்டி மற்றும் உடுநுவர மாவட்ட இணைப்பாளராக தக்சில பிரேமசிறியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கண்டி ஹேவாஹெட்ட அமைப்பாளராக சஞ்சீவ சுரவீரவும் கண்டி யட்டிநுவர அமைப்பாளராக தக்சில செனவிரத்னவும் ரத்கம அமைப்பாளராக துசித திலங்க ஜயசிங்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

2025/26இல் ரூ.200 பில்லியனுக்கு மேற்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல்

2025/26 காலத்தில் ரூ. 200 பில்லியனுக்கு மேற்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல்: அமைச்சர்...

பிரான்ஸில் முதல் எபோலா நோயாளர் உறுதி

காங்கோவில் ஏற்பட்டுள்ள சமீபத்திய எபோலா பரவலின் பின்னணியில், பிரான்ஸில் முதல் எபோலா...

**கோட்டாபயவின் ரிட் மனு மீதான மேலதிக விசாரணை ஜூலை 6க்கு ஒத்திவைப்பு**

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, 2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்