27.1 C
Jaffna
December 13, 2024
Pagetamil
கிழக்கு

திருகோணமலையில் சிவில் சமூகத்துடன் கூட்டணி: சைக்கிள் அறிவிப்பு!

திருகோணமலை மாவட்டத்தில் சிவில் சமூகத்துடன் இணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

மேலும் திருகோணமலை மாவட்டத்தை தவிர்ந்து வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஏனைய மாவட்டங்களில் எதிர்வரும் பொது தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் எனவும் திருகோணமலை மாவட்டத்தில் மாத்திரம் திருகோணமலை மாவட்ட சிவில் சமூகத்துடன் இணைந்து தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளதாக தமிழ் மக்கள் தேசிய முன்னணியின் அகில இலங்கை இளைஞர் அணியின் செயலாளரும் திருகோணமலை மாவட்ட செயலாளருமான ஸ்ரீ பிரசாத் தெரிவித்தார்.

இன்று (27) திருகோணமலையில் அமைந்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்-

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் திருகோணமலை மாவட்டம் என்ற அடிப்படையிலும் திருகோணமலை தமிழ் சமூகம் மற்றும் சிவில் சமூகம் என்ற அடிப்படையிலும் திருகோணமலை மாவட்டத்தில் ஒரு பாராளுமன்ற ஆசனத்தை ஏனும் தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில் திருகோணமலை மாவட்டத்தில் மாத்திரம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது சிவில் சமூகத்துடன் இணைந்து தனித்து போட்டியிட தீர்மானித்து உள்ளதாக தெரிவித்தார்.

குறித்த தீர்மானமானது திருகோணமலை மாவட்டத்தின் அரசியல் இருப்புக்காகவும் திருகோணமலை மாவட்டத்தின் பாராளுமன்ற தமிழ் உறுப்பினர் ஒருவரை தக்க வைத்துக் கொள்வது திருகோணமலை மாவட்ட சமூகம் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் சிவில் சமூகத்தின் எதிர்பார்ப்பாக இருக்கின்ற நிலையில் குறித்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டதாக இதன் போது சுட்டிக்காட்டினார்

மேலும் பொதுக் கட்டமைப்பு எனும் பெயரில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட எந்த ஒரு அமைப்புடன் இணைந்தும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயல்படாது, கடந்த 15 வருடங்களுக்கு மேலாக தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து பயணித்த எந்த ஒரு அமைப்புடன் இணைந்து செயல்படாது எனவும், ஒற்றுமை என்பது பல கட்சிகளின் தலைவர்களை ஒன்றிணைப்பது அல்ல ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் ஒன்றிணைப்பதே ஒற்றுமை எனவும் இவ்வாறு தலைவர்களை ஒன்றிணைத்து ஒற்றுமை எனும் பெயரில் செயல்படுவார்களே தமிழ் தேசியம் எனக் கூறிக் கொண்டு சமூகத்தில் இன்னும் பல புதிய தலைவர்கள் உருவாகிக் கொண்டே இருப்பார்கள்

தற்போது போட்டியிடும் 10 உறுப்பினர்கள் எதிர்வரும் காலங்களில் 20 உறுப்பினர்களாக மாற்றப்பட்டு தமிழ் சமூகத்துக்கு என தொடர்ச்சியாக பெறப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆசனம் ஒன்று இல்லாமல் போகும் எனவும் தொடர்ந்து சிவில் சமூகத்துடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயற்படும் என தெரிவித்தார்.

-ரவ்பீக் பாயிஸ் –

What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இலிங்கநகரில் இளைஞர் வள நிலையம் திறப்பு

east pagetamil

படகு கவிழ்ந்து ஒருவர் பலி மட்டக்க்களப்பில் சோகம்

east pagetamil

மட்டக்களப்பில் குடும்பஸ்தர் கொலை!

Pagetamil

குருக்கள்மடத்தில் வாகன விபத்து: மூவர் வைத்தியசாலையில் அனுமதி

east pagetamil

திருக்கோணமலை மாவட்ட மூத்த குருக்களுக்கான ‘வியான்னி இல்லம்’ திறப்பு விழா

east pagetamil

Leave a Comment