எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகித்த கட்சிகள் ஒன்றாக இணைந்து பொதுத்தேர்தலில் போட்டியிட வேண்டுமென இலங்கை தமிழ் அரசு கட்சி விருப்பம் தெரிவித்துள்ளது.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் பிரமுகர்கள், இன்று (25) அதன் தலைவர் மாவை சேனாதிராசாவின் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடிய போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
மாவை சேனாதிராசா, சி.சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், ஈ.சரவணபவன், சிவமோகன், சீ.யோகேஸ்வரன் ஆகியோர் இந்த கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில், வீட்டு சின்னத்தில், முன்னைய தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக்கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டுமென இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் பொறுப்பு, மாவை சேனாதிராசாவிடம் வழங்கப்பட்டுள்ளது.
இன்றைய சந்திப்பில் கலந்து கொண்டவர்களுக்கு பன்றி, கோழி இறைச்சி விருந்தும் வழங்கப்பட்டது.