பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்களுக்கான பதிவுகள் ஆரம்பம்

Date:

புதிய கல்வியாண்டுக்கான மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு பதிவு செய்யும் நடவடிக்கைகள் இன்று (21) ஆரம்பமாகவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குச் சென்று இது தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என மேலும் தெரிவித்தார்.

மாணவர்கள் எதிர்வரும் டிசம்பருக்கு முன்னர் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்பட உள்ளனர்.

2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் நேற்று (20) வெளியிடப்பட்டுள்ளன.

இதேவேளை, இருதரப்பு மாணவர்களுக்கிடையிலான மோதல் காரணமாக மூடப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மீண்டும் திறக்க நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

அதன்படி மறுநாள் மாணவர்கள் விடுதிக்கு வரலாம் என நிர்வாகம் கூறுகிறது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மே 1 முதல் அறிமுகமாகிறது டிஜிட்டல் மோட்டார் காப்பீட்டு அட்டை

இலங்கையின் முதல் டிஜிட்டல் மோட்டார் காப்பீட்டு அட்டை மே 1 முதல்...

நயன்தாராவின் இந்திப் பட ரிலீஸ் அறிவிப்பு

கார்த்தி, நாகார்ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்களை இயக்கியவர்...

பிரதமர் மோடி கொடுத்த 10 ரூபாயை ரூ.1.11 லட்சத்துக்கு வாங்க பலர் ஆர்வம்

மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரதமர் மோடி கடந்த வாரம் ஜார்கிராமுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்