சுவிற்சர்லாந்தில் நேற்று (18) புதன்கிழமை அதிகாலை இலங்கையை சேர்ந்த ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இது கொலையாக இருக்கலாமென சந்தேகிக்கப்படும் நிலையில், அந்த நபருடன் தங்கியிருந்த இரண்டு சுவிற்சர்லாந்து ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளாட்ப்ரூக், Riedthofstrasse இல் உள்ள அபார்ட்மெண்டில் குறித்த சம்வம் நிகழ்ந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
அவசர சேவை மையத்திற்கு கிடைத்து அழைப்பின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், பாதிக்கப்பட்டவரை காப்பாற்ற முயற்சித்தனர். எனினும், அந்த முயற்சி வெற்றியடையவில்லை. இலங்கையை சேர்ந்த 34 வயதுடைய நபரே உயிரிழந்தார்.
சம்பவ இடத்தில் 40 மற்றும் 54 வயதுடைய இரண்டு சுவிஸ் ஆண்களை சூரிச் கன்டோனல் பொலிஸார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட நபருடன் அவர்கள் குடியிருப்பில் இருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
குறித்த மரணத்திற்கான சரியான காரணம் என்ன என்பது தொடர்பான, சூரிச் காவல்துறை மற்றும் உள்ளூர் வழக்கறிஞர் அலுவலகத்தால் மேலதிக விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர், மேலும் வழக்கு வெளிவரும்போது மேலும் விவரங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.