Pagetamil
முக்கியச் செய்திகள் விளையாட்டு

ஆசியக் கிண்ணத்தை வென்றது இலங்கை மகளிர் அணி!

9வது மகளிர் ஆசியக் கிண்ணத்தை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.

இந்திய அணிக்கு எதிரான இன்று இடம்பெற்ற ஆசியக் கிண்ண ரி20 இறுதிப்போட்டியில் இலங்கை அணி, 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டி, ஆசியக் கிண்ணத்தை முதல் முறையாக வென்றுள்ளது.

ரங்கிரி தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் ஸ்மிருதி மந்தனா அதிகபட்சமாக 60 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் கவிசா டில்காரி 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பின்னர் 166 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 18.4 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் ஹர்ஷிதா சமரவிக்ரம ஆட்டமிழக்காமல் 69 ஓட்டங்களை பெற்றதுடன், அணித்தலைவர் சாமரி அத்தப்பத்து 61 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தரம் 5 புலமைப்பரிசில் முடிவுகளும், வெட்டுப்புள்ளியும் வெளியீடு!

Pagetamil

அட்டகாசத்தில் ஈடுபட்ட அர்ச்சுனாவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil

3 மணித்தியால இழுபறியின் பின் இஸ்ரேல்- ஹமாஸ் போர் நிறுத்தம் அமுலாகியது!

Pagetamil

என் மகளுக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை!

Pagetamil

`இளம் எம்.பி -யைக் கரம் பிடிக்கும் ரிங்கு சிங்’; யார் இந்த பிரியா சரோஜ்?

Pagetamil

Leave a Comment