வைத்தியர் அர்ச்சுனாதான் வேண்டுமென அடம்பிடித்த தம்பிக்கு பிணை!

Date:

யாழ்ப்பாணத்தில் சுகாதார அமைச்சர் பங்கேற்ற கலந்துரையாடலில் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தம்பிராசாவை 75ஆயிரம் ரூபாய் சரீர பிணையில் செல்ல அனுமதித்த சாவகச்சேரி நீதவான் நீதிமன்று, வழக்கினை எதிர்வரும் 21ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.

வடக்கு மாகாணத்தின் சுகாதார மேம்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண சபை கேட்போர் கூடத்தில் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தலைமையில் புதன்கிழமை (17) நடைபெற்ற போது குழப்பத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் சாவகச்சேரி பொலிஸாரால் jம்பிராசா செய்யப்பட்டார்.

சர்ச்சைக்குரிய வைத்தியர் அர்ச்சுனாவுடன் வடமகாணசபை கட்டிடத்துக்குள் திடீரென நுழைந்த தம்பிராசா, அர்ச்சுனாவுக்கு சார்பாக பேச முற்பட்டார். வைத்தியர் அர்ச்சுனாவை கூட்டத்துக்குள் யார் அனுமதித்தது என உயரதிகாரிகள் மட்டத்தில் சர்ச்சை தோன்றியது. இது தொடர்பில் ஆளுனரும், வடக்கு பிரதம செயலாளரும் முரண்பட்டு கொண்டனர்.

ஈ.பி.டி.பி சார்பில் கூட்டத்தில் கலந்து கொண்ட சி.தவராசா மூலமாக வைத்தியர் அர்ச்சுனா அழைத்து வரப்பட்டாரா என வினவப்பட்டது. தவராசா அதை மறுத்தார்.

என்றாலும், ஈ.பி.டி.பி அனுசரனையுடன்தான் அர்ச்சுனா கூட்டத்துக்குள் நுழைந்தார் என்ற சந்தேகம் உயரதிகாரிகள் மட்டத்தில் ஏற்பட்டுள்ளது. நேற்றைய கூட்டத்தின் போது, சுகாதார அமைச்சரை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல தவராசா பகீரத முயற்சி மேற்கொண்டார். எனினும், சுகாதார அமைச்சர் அதை நிராகரித்து விட்டார்.

அர்ச்சுனாவுடன் தம்பிராசா கூட்டத்துக்குள் நுழைந்த பின்னர், கூட்டத்தை நேரலை செய்ய முயன்றார். அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர், அர்ச்சுனா விவகாரமாக பேச வேண்டுமென கோரிக்கை விடுத்தார். சுகாதார அமைச்சர் அதற்கு சம்மதிக்கவில்லை. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பொறுப்பு வைத்தியராக அர்ச்சுனா நியமிக்கப்பட வேண்டுமென தம்பிராசா கூச்சலிட தொடங்கனார்.

இதையடுத்து, சாவகச்சேரி பொலிசார் அவரை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றனர்.

கைது செய்யப்பட்ட தம்பிராசாவை விசாரணைகளின் பின்னர் , சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய போதே , அவரை பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்தது.

spot_imgspot_img

More like this
Related

யாழில் போலி உறுதிப் பத்திரங்கள் மூலம் அரச காணிகளைச் சுவீகரிக்கும் மோசடி வலையமைப்பு

யாழ்ப்பாணத்தில் , நீர்ப்பாசன திணைக்களத்தின் காணியை அடாத்தாக கையகப்படுத்தியிருந்த தனியாரிடம் இருந்து குறித்த...

சாய்ந்தமருது பெண் சந்தைப் பகுதியில் ஒலிபெருக்கி பாவனைக்கு கட்டுப்பாடு விதிக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை

அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பெண் சந்தைப்...

இலங்கையில் உலமாக்களுக்கென பிரத்தியேக சீருடை மற்றும் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்

இலங்கை உலமாக்களுக்கென பிரத்தியேகமான சீருடை ஒன்றை அறிமுகப்படுத்தி அதனைச் சட்டமாக்க வேண்டும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்