26.9 C
Jaffna
February 28, 2025
Pagetamil
இலங்கை

வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய முன்னாள் போராளி கைது!

18 வருடங்களாக வெளிநாட்டில் வாழ்ந்துவிட்டு, இலங்கைக்கு திரும்பிய தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவரை இன்று (18) வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசிங்க செவ்வாய்க்கிழமை (16) உத்தரவிட்டார்.

2006ஆம் ஆண்டு வில்பத்து பூங்காவில் வெடிகுண்டு தாக்குல் நடத்தி ஜீப்பில் சென்றவர்களைக் கொன்ற சம்பவத்தில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டிருந்தனர். இந்த சம்பவத்தில், தற்போது கைதானவரும் தொடர்புபட்டுள்ளதாக பயங்கரவத புலனய்வு பிரிவினர் குறிப்பிடுகின்றனர்.

சந்தேகநபரை 72 மணித்தியாலங்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்குமாறு பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கையை கருத்திற் கொண்டு நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கிளிநொச்சி ஜெயந்தி நகர் இலக்கம் 107 இல் வசிக்கும் சுப்பிரமணியம் சசிகரன் என்பவரே இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

2006ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் திகதி வில்பத்து தேசிய பூங்காவில் உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் சென்ற ஜீப் மீது குண்டுவீசி தாக்கி அதில் பயணித்தவர்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் அனுராதபுரம் மேல் நீதிமன்றம் சந்தேகநபருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்துள்ளதாக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

இதன்படி, சந்தேகநபர் ஜூலை 11ஆம் திகதி வெளிநாட்டில் இருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு (BIA) வந்தடைந்த போது, ​​விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் அவரை கைது செய்து தமது பிரிவினரிடம் ஒப்படைத்ததாக பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்தனர். குண்டுத் தாக்குதல் நடத்தி ஜீப்பில் இருந்தவர்களைக் கொல்ல உதவியமை, விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து அரச படைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு இராணுவப் பயிற்சி பெற்றமை ஆகிய குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

சந்தேகநபரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டதன் பின்னர் இன்று (18) நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அடுத்த 24 மணி நேரத்துக்கு தொடரும் சீரற்ற வானிலை

east tamil

விசாரணை அறிக்கைகள் மாயம் – நளிந்த ஜயதிஸ்ஸ

east tamil

கிராமிய திட்டங்களுக்கு 1400 பில்லியன் மூலதன ஒதுக்கீடு – ஜனாதிபதி

east tamil

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்பட வேண்டும் – ஜோன் ஜிப்ரிகோ

east tamil

பிறைக்குழு மாநாடு இன்று!

east tamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!