நடிகை சுனைனாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது!

Date:

தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக நடிகை சுனைனா அறிவித்துள்ளார்.

‘காதலில் விழுந்தேன்’ படத்தின் மூலமாக கோலிவுட்டில் அறிமுகமானவர் சுனைனா. இப்படத்தைத் தொடர்ந்து ‘மாசிலாமணி’, ‘வம்சம்’, ‘நீர்ப்பறவை’, ‘சில்லுக்கருப்பட்டி’, ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ போன்ற படங்களில் நடித்துள்ளார். படங்கள் மட்டுமின்றி வெப் சீரிஸிலும் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

சமீபத்தில் ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார். அது நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. 35 வயதாகும் சுனைனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவருடன் கைகோர்த்திருக்கும் புகைப்படத்தை நேற்று முன் தினம் (ஜூன் 5) பகிர்ந்திருந்தார். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக, ரசிகர்கள் பலரும் நடிகை சுனைனாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதா, காதலர் யார் என்றும் கமென்ட் செய்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது தனக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக மோதிரம் மாற்றிக்கொண்ட புகைப்படத்தினைப் பகிர்ந்து விரைவில் திருமணம் ஆகவிருப்பதை சுனைனா உறுதிப்படுத்தி இருக்கிறார்.

இது குறித்துத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவில், ‘எனது கடைசி பதிவு குறித்துப் பல கட்டுரைகளைப் பார்த்தேன். அதனால் இதனைத் தெளிவுபடுத்துகிறேன். எனது நிச்சயதார்த்தம் மகிழ்ச்சிகரமாக முடிந்துவிட்டது. எனக்குக் குறுஞ்செய்திகள் மூலம் வாழ்த்துகள் அனுப்பிய அனைவருக்கும் நன்றி. அந்த வாழ்த்துகளை மிகவும் பெரிதாக நினைக்கிறேன்’ எனக் கூறியிருக்கிறார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பாலியல் தொல்லை கொடுத்த இசையமைப்பாளர்: பிரபல பின்னணிப் பாடகி பரபரப்பு புகார்

தமிழில், பேச்சிலர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ஜடா, இரவுக்கு ஆயிரம்...

UPDATE: அவுஸ்திரேலிய கடன் மோசடி: இடைநீக்கப்பட்ட அதிகாரி தற்கொலையா?

ஒரு அவுஸ்திரேலிய நிறுவனத்திற்கு கடன் தவணைகளை வழங்கும் போது, ​​திறைசேரிக்குச் சொந்தமான...

2.5 மில்லியன் டொலர் இணையத்திருட்டு: பணிநீக்கம் செய்யப்பட்ட நிதியமைச்சின் அதிகாரி சடலமாக மீட்பு!

திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் மாயமான சம்பவம் தொடர்பில் பணி நீக்கம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்