3 வருடங்களின் பின் வீடு திரும்பிய இளம் பெண் விபத்தில் பலி

Date:

3 வருடங்கள் குவைத்தில் பணிபுரிந்த பின்னர், நாடு திரும்பிய இளம் தாயொருவர், வீடு திரும்பிக் கொண்டிருந்த போது விபத்தில் உயிரிழந்துள்ளார்.

பசறை பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயான சித்திரன் நகுலேஸ்வரி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஏறக்குறைய 3 வருடங்களாக குவைத்தில் பணிபுரிந்துவிட்டு தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பெல்மடுல்ல பகுதியில் இவர்கள் பயணித்த முச்சக்கரவண்டி பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குவைத்திலிருந்து நாடு திரும்பிய மனைவியை அழைத்து வர கணவரும், மற்றொரு உறவினரும் வாடகை முச்சக்கர வண்டியில் விமான நிலையம் சென்றுள்ளனர். அங்கிருந்து திரும்பி வந்தபோது விபத்து நிகழ்ந்தது.

பேருந்து முச்சக்கர வண்டியுடன் மோதி வீதியை விட்டு விலகி சுமார் 15 அடி பள்ளத்தில் வீழ்ந்துள்ளது.

பெல்மடுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரில்ஹேன பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 24 பேர் காயமடைந்தனர்

விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த உயிரிழந்த பெண் உட்பட மூன்று பயணிகளும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த பெண்ணின் கணவரும் காயமடைந்தவர்களில் ஒருவர்.

காயமடைந்தவர்கள் பெல்மடுல்ல, கஹவத்தை மற்றும் இரத்தினபுரி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மாலை வரை காயமடைந்தவர்களில் 16 பேர் மட்டுமே இரத்தினபுரி மற்றும் கஹவத்தை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்

இதன்போது பலத்த காயமடைந்திருந்த நாடு திரும்பிய பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரின் சடலம் இரத்தினபுரி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

யாழில் நேற்று 5 பேர் பலி

யாழ்ப்பாணம் வலி. வடக்குப் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற நான்கு சம்பவங்களில்...

சேரன் காணாமல் போன ஒரு வருடத்தின் பின் சந்தேகநபர்கள் கைது!

இளைஞர் ஒருவர் மாயமான விவகாரத்தில், கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவு, ஒரு வருடத்திற்குப்...

எரிபொருள் விலைகள் எகிறின!

நேற்று (1) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலையை திருத்தியமைத்துள்ளதாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்