கிளிநொச்சியில் ஐஸ் அடித்துக் கொண்டிருந்த உப பொலிஸ் பரிசோதகர் சிக்கினார்!

Date:

கிளிநொச்சி ஆனந்தபுரம் பகுதியில் போதைப்பொருள் வியாபாரி ஒருவரின் வீட்டினுள் இருந்த உப பொலிஸ் பரிசோதகருடன் 5 பேரை கிளிநொச்சி பொலிஸார் நேற்று முன்தினம் (28) கைது செய்துள்ளனர்.

குறித்த வீட்டில் சந்தேகத்திற்கிடமான வகையில் சிலர் தங்கியிருப்பதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிசார் அந்த வீட்டை சுற்றிவளைத்து சோதனையிட்ட போது வீட்டில் 2700 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் இருந்தமையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் மட்டக்களப்பை சேர்ந்தவர். யாழ்ப்பாணம் ஊர்க்காவற்துறை பொலிஸில் பணிபுரிபவர் என்பதும் அவர் கிளிநொச்சியில் உள்ள இந்த வீட்டிற்கு போதைப்பொருள் உட்கொள்வதற்காக வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இவர் உள்ளிட்ட குழுவினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட போது, ​​போதைப்பொருள் வியாபாரி தவிர்ந்த ஏனைய நால்வரும் போதையில் இருந்தமை தெரியவந்துள்ளது.

உப பொலிஸ் பரிசோதகர் தனது நண்பரான இந்த போதைப்பொருள் வியாபாரிக்கு வியாபாரத்தை பராமரிக்க உதவியிருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. போதைப்பொருள் வியாபாரத்துடன் அவர் தொடர்புபட்டிருந்தது உறுதியானதையடுத்து, அவர் மீது போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாகவும் வழக்கு தொடரப்படவுள்ளது.

சந்தேகநபர்கள் ஐவரையும் இன்று (30) கிளிநொச்சி நீதிமன்றில் ஆஜர்படுத்த கிளிநொச்சி பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

மரத்தில் கட்டிவைக்கப்பட்ட இளைஞன் பொலிஸ் காவலில் உயிரிழந்த சர்ச்சை சம்பவம்!

கொபெய்கனே  பொலிஸாரின் காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக,...

மேய்ச்சல் தரை விவகாரம்: மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் முன் போராட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் பாரம்பரியமான மயிலத்தமடு மற்றும் மாதவனை மேய்ச்சல் தரைகளை சட்டவிரோத...

ஐ.ம.ச, ஐ.தே.க கூட்டும் வெற்றி பெறுவது சிரமம்!

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இடையிலான கூட்டணி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்