கையடக்க தொலைபேசியினால் பறிபோன உயிர்

Date:

கட்டுகுருந்த மற்றும் களுத்துறை ரயில் நிலையங்களுக்கு இடையில் கையடக்கத் தொலைபேசியில் ஹாண்ட்-ஃப்ரீயை இணைத்துக்கொண்டு புகையிரத பாதையில் பயணித்த இளைஞர் ஒருவர் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர் களுத்துறை குரே வீதியைச் சேர்ந்த மொஹமட் இருபான் மொஹமட் இமாட் என்ற 21 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த இளைஞன் தனது கையடக்கத் தொலைபேசி ஹாண்ட்-ஃப்ரீயை காதில் பொருத்திக் கொண்டு கட்டுகுருந்தவிலிருந்து களுத்துறை நோக்கி புகையிரதப் பாதையில் நடந்து சென்றபோது, ​​அளுத்கமவில் இருந்து மருதானை நோக்கி பயணித்த ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பல தடவைகள் ஹோர்ன் ஒலித்த போதும், சுற்றியிருந்தவர்கள் கூச்சலிட்ட போதும் அவர் புகையிரத பாதையில் பயணித்தமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டாளரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

மட்டு நகரில் கடை தொகுதிகள் தீப்பற்றியதை தீயணைப்பு படையினர் 4 மணித்தியால போராட்டத்தின் பின்னர் தீயை கட்டுப்பாட்டில்

மட்டக்களப்பு நகரில் சென்றல் வீதி மற்றும் பஸார் வீதியிலுள்ள கடைகள் இன்று...

வெனிசுலா நிலநடுக்க உயிரிழப்பு 3,500ஐ கடந்தது!

வெனிசுலாவின் இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,535 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள்...

நீர்கொழும்பு சிறைக்கலவரம்: துப்பாக்கிகளை பறித்து சுட்ட கைதிகள்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவம் குறித்து முறையான மற்றும் விரிவான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்