கர்ப்பமான 18 வயது காதலியை கைகழுவிய காதலன் கொலை: 10 பேருக்கு விளக்கமறியல்!

Date:

குளியாப்பிட்டிய இளைஞனின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் அவ்வப்போது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 10 சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு குளியாப்பிட்டிய நீதவான் ரந்திக லக்மால் ஜயலத் நேற்று (27) உத்தரவிட்டுள்ளார்.

குளியாப்பிட்டிய காட்டுப்பகுதியில் இளைஞன் ஒருவன் கொல்லப்பட்டமை தொடர்பில் குளியாப்பிட்டிய பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் இளைஞன் யார், எங்கே, எப்படி கொல்லப்பட்டார் என்ற கேள்வி இன்னும் விசாரணையில் இருப்பதாகவும், ஹலவத்தை ஆதார வைத்தியசாலையில் அவரது சடலத்தின் பிரேதப் பரிசோதனை இன்னும் நிறைவடையவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், இந்தக் கொலையானது நன்கு திட்டமிடப்பட்டு நுட்பமான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், இது தொடர்பான விசாரணைகள் நிறைவடையவில்லை எனவும் பொலிஸார் நீதிமன்றில் சுட்டிக்காட்டினர்.

18 வயதான காதலி கர்ப்பமானதை தொடர்ந்து, அவரை திருமணம் செய்ய மறுத்ததால் இந்த இளைஞன் கடத்தப்பட்டு கொல்லப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

மட்டு நகரில் கடை தொகுதிகள் தீப்பற்றியதை தீயணைப்பு படையினர் 4 மணித்தியால போராட்டத்தின் பின்னர் தீயை கட்டுப்பாட்டில்

மட்டக்களப்பு நகரில் சென்றல் வீதி மற்றும் பஸார் வீதியிலுள்ள கடைகள் இன்று...

வெனிசுலா நிலநடுக்க உயிரிழப்பு 3,500ஐ கடந்தது!

வெனிசுலாவின் இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,535 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள்...

நீர்கொழும்பு சிறைக்கலவரம்: துப்பாக்கிகளை பறித்து சுட்ட கைதிகள்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவம் குறித்து முறையான மற்றும் விரிவான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்