30 வயதிற்குட்பட்ட 30 ஆசியா பட்டியலில் இலங்கை நடிகை

Date:

இலங்கை நடிகையும் திரைப்பட தயாரிப்பாளருமான தினாரா புஞ்சிஹேவா, ஃபோர்பஸ் சஞ்சிகையால் அண்மையில் வெளியிடப்பட்ட “30 வயதிற்குட்பட்ட 30 ஆசியா” பட்டியலில் ஒன்பதாவது முறையாக இடம்பிடித்துள்ளார்.

ஃபோர்ப்ஸ் இதழ் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் பார்க்க வேண்டிய “30 வயதுக்குட்பட்ட ஆசியா” பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய 30 தொழில்முனைவோர், தலைவர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் முன்னோடிகளாக இருப்பவர்கள் இந்தப் பட்டியலில் இடம்பிடித்திருப்பதுடன், அவர்கள் அனைவரும் 30 வயதுக்கும் குறைவானவர்கள் என்பது குறிப்படத்தக்கது.

10 பிரிவுகளின் கீழ் இந்தப் பட்டியலுக்கு ஆட்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டுப் பிரிவில் இருந்து தினரா புஞ்சிஹேவா இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தினரா புஞ்சிஹேவா தனது சொந்த திரைப்படமான மாலா மூலம் 2018 இல் திரைப்படத் துறைக்கு வந்தார், ஒரு சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட பிறகு, திரைப்படத் தயாரிப்பாளர் பிரசன்னா விதானாவின் கவனம் அந்தப் படத்தின் மீது ஈர்க்கப்பட்டது. தினாராவை தனது படத்தில் நடிக்க பிரசன்னா விதானா அழைத்தார்

தினாரா லண்டன் குயின் மேரி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு நாடகம் மற்றும் நடிப்புத் துறையில் நுழைவதற்கான வாய்ப்புகளை வழங்கும் லாப நோக்கற்ற நிறுவனமான லிட்டில் ஆக்டர்ஸின் நிறுவனர் ஆவார்.

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் எம்.பி வி.தர்மலிங்கம் நினைவு நிகழ்வு!

யாழ்ப்பாணம் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப்...

தந்தை செல்வாவின் சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்க!

தெல்லிப்பளையில் உள்ள தந்தை செல்வாவின் தூபி மீது தாக்குதல் நடத்தி சேதப்படுத்திய...

எதிர்ப்பு குரல்களை முடக்குவதிலேயே என்.பி.பி மும்முரம்!

தேசிய மக்கள் சக்தியினதும் JVPயினதும் சொந்த நிகழ்ச்சி நிரலுக்கு உடன்படாதவர்களை முடக்குவதிலும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்