யாழில் பொலிசார் விரட்டிச் சென்றவர் உயிரிழப்பு: பொலிசார் உதைந்து விழுத்தினரா?

Date:

யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவனில் பொலிசார் விரட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மின் கம்பத்தில் மோதி உயிரிழந்துள்ளார்.

இன்று (10) இரவு இந்த சம்பவம் நடந்தது.

பலாலி போக்குவரத்து பிரிவு பொலிசார் கடமையில் இருந்த போது, நிறுத்தாமல் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றை விரட்டிச் சென்ற போது இந்த அனர்த்தம் நிகழ்ந்தது.

சுன்னாகம் பொலிஸ் பிரிவிலுள்ள பிள்ளையார் கோவிலுக்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பழைய தபால் நிலைய வீதி, கோப்பாய் தெற்கு என்ற முகவரியில் வசிக்கும் செல்வநாயகம் பிரதீபன் (41)  என்பவரே உயிரிழந்தார்.

பொலிசார் அந்த மோட்டார் சைக்கிளை விரட்டிச் சென்று, உதைத்து விழுத்தியதாகவும், அதன்போது மோட்டார் சைக்களில் பயணித்தவர் மின் கம்பத்தில் மோதி விழுந்ததாகவும் பிரதேசவாசிகள் குற்றம்சுமத்தியுள்ளனர்.

அந்த இடத்தில் பொதுமக்கள் குழுமியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

யாழ். விமான நிலைய ஓடுபாதையில் மின்விளக்குகள் கூட இல்லாதது அதிர்ச்சியளிக்கிறது

காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக்கு இந்திய...

6 பிரதிப்பொலிஸ்மா அதிபர்களுக்கு இடமாற்றம்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு, ஆறு பிரதி பொலிஸ் மா...

கொள்ளுப்பிட்டியில் சடலம் மீட்பு

கொள்ளுப்பிட்டி, அல்பிரட் ஹவுஸ் அவென்யூ பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்