‘உனக்கு குஞ்_ _ணி இருந்தால்…’;விபரீத சவால் விடும் யாழ் போலி வைத்தியர்: பிள்ளைகளின் எதிர்காலத்தை பணயம் வைக்கும் பெற்றோர்!

Date:

யாழ்ப்பாணத்தில் உள்ள போலி வைத்தியர்களை நம்பி, தமது சிறு பிள்ளைகளின் எதிர்காலத்தை பணயம் வைக்கும் பெற்றோர் பற்றி வைத்தியத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

யாழ்ப்பாணம், உரும்பிராயில் இயங்கும் பதிவு செய்யப்படாத மருத்துவ சிகிச்சை நிலையமொன்றை நடத்தி வரும் ரகுராம் என்ற நபர், சிறு குழந்தையின் தலையில் நீர் தேங்கியதை, தனது சிகிச்சை முறையினால் அகற்றியதாக தெரிவித்துள்ளார்.

இந்த நபரிடம் சிகிச்சை பெற்றவர்கள் சிலர் ஏற்கெனவே உயிரிழந்ததாக குற்றம்சாட்டப்பட்டு, நீதிமன்றம் வரை இந்த விவகாரம் சென்றது.

யாழ்ப்பாணத்தில் இயங்கும் போலி வைத்தியர்கள், ஆங்கில வைத்திய முறையையும், அரச வைத்தியசாலைகளையும் அபகீர்த்திக்குள்ளாக்கி வீடியோ வெளியிடுமளவிற்கு கொட்டமடித்து வருகிறார்கள். ஆனால், அவர்களை கட்டுப்படுத்த திராணியில்லாமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உள்ளனர். யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரனே இவற்றை கையாள வேண்டியவர் என்ற போதும், அவர் இந்த விவகாரத்தில் மெத்தனப் போக்குடன் உள்ளதாகவும் சுகாதாரத்துறையினர் விசனம் தெரிவித்து வருகிறார்கள்.

பதிவு செய்யப்படாத சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்றதாக குறிப்பிடப்படும் குழந்தையின் பாதிப்பு தொடர்பில் வைத்தியர் ஒருவர் தனது முகநூலில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருக்கும் ஒரு போலி வைத்தியர் , குழந்தையின் மூளையில் தண்ணீர் தேங்கியதை சத்திர சிகிச்சை இல்லாமல் சுகமாக்கி உள்ளதாக அறிவித்து உள்ளார்.

ஒரு குழந்தைக்கு தலையில் நீர் தேங்கிய நிலையில் அந்த நீரை அகற்ற வைத்தியர்கள் சத்திர சிகிச்சைக்கு பரிந்துரைக்க, பெற்றோர் பிள்ளையை அந்த போலி மருத்துவரிடம் அழைத்துச்சென்றபோது அந்த போலி வைத்தியர் நாடி பிடித்து அதை சுகமாக்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.

அந்த நோயை பற்றி கூகிள் பண்ணியபோது வந்த முதல் தகவல் படத்தில் உள்ளது.
அதன் மொழிபெயர்ப்பு,
1. அந்த நோய்க்கு உரிய மருத்துவம்/ சத்திர சிகிச்சை செய்யாது போனால் 50 வீதமான பிள்ளைகள் இறந்துவிடும். அதாவது அந்த நோய் வந்த 100 பிள்ளைகளில் 50 பிள்ளைகள் எந்த மருத்துவமும் இல்லாமல் தப்பிவிடும்.
2. அப்படி தப்பும் பிள்ளைகள், உயிர் தப்பினாலும் மூளைவளர்ச்சி பாரியளவில் பாதிக்கப்பட்ட பிள்ளைகளாக வளராலாம்.

அதைத் தடுப்பதற்கே மருத்துவர்கள் சத்திர சிகிச்சையை பரிந்துரைத்து இருப்பார்கள்.

அதை புரிந்துகொள்ளாத பெற்றோரை ஏமாற்றும் அந்த போலி வைத்தியர் இயற்கையாக நீர்த்தேக்கம் குறைவதை தான் நாடி பிடித்து சுகமாக்கியதாக சொல்கிறார்.

ஆனால் உண்மையான பிரச்சினை, ஏற்கனவே மூளையில் தேங்கிய நீரினால் அந்தப் பிள்ளையின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படலாம் என்பதே.

அதை புரிந்துகொள்ளாத அந்த போலி மருத்துவர் அந்தப் பிள்ளைக்கு 4 மாதங்களாக சிகிச்சை அளிப்பதாக ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.

அதாவது பெற்றோருக்கு பொய் நம்பிக்கையை கொடுத்து நான்கு மாதங்கள் அந்த பிள்ளையின் மூளையின் வளர்ச்சியை பாதிக்கக்கூடிய செயலை செய்துள்ளார்.
இதற்காக உடனடியாக அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கேட்க மாட்டேன் , காரணம் கேட்டாலும் அது நடக்காது.

ஆனால், குறித்த பெற்றோரை அறிந்தவர்கள் அவசரமாக இந்தத் தகவலை அவர்களிடம் கொண்டு சேர்த்து தகுதியான மருத்துவ நிபுணரை உடனடியாக சந்திக்க அறிவுரை கூறுங்கள்.

இது விளையாட்டு இல்லை. ஒரு குழந்தையின் எதிர்காலம் பற்றியது.

வைத்தியரின் இந்த பேஸ்புக் பதிவின் கீழ், போலி வைத்தியர் என குறிப்பிடப்பட்ட ரகுராம் நாகரிகமற்ற முறையில் பதிவிட்டுள்ளார்.

 

Share post:

spot_imgspot_img

More like this
Related

கடன் திருட்டு விவகாரத்தில் கோப் குழுவுக்கு அழைக்கப்பட்ட திறைசேரி செயலாளர்

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் இணையவழித் திருட்டு...

அவுஸ்திரேலிய கடன் மோசடி: நீதிமன்றத்தில் சிஐடி வெளிப்படுத்திய அதிர்ச்சித் தகவல்!

திறைசேரியினால் அவுஸ்திரேலிய அரசாங்க நிறுவனமொன்றுக்கு வெளிநாட்டு கடன் தவணையாக செலுத்தப்பட்ட 2.5...

2025 வாகன இறக்குமதியில் 3வது பெரிய ஆண்டு!

வாகன இறக்குமதியைப் பொறுத்தவரை, 2025 ஆம் ஆண்டு நாட்டின் வரலாற்றில் மூன்றாவது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்