தென்மராட்சி, ஏ9 பிரதான வீதி, கைதடி பகுதியில் இன்று காலை 5:45 மணியளவில் ஹைஏஸ் வகனமும், லான்ட் மாஸ்டரும் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்தின் போது லாண்ட் மாஸ்ரரில் பயணித்த ஐவரில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் மோசமான காயங்களுக்குள்ளான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹைஏஸ் வானில் பயணித்த சிறுமி ஒருவர் மற்றும் லாண்ட் மாஸ்ரர் சாரதி ஆகியோர் சிறு காயங்களுடன் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பில் இருந்து வெளிநாட்டவர்களை ஏற்றிக் கொண்டு யாழ் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ஹைஏஸ் வாகன சாரதி நித்திரைத் தூக்கம் காரணமாக முன்னே பயணித்துக் கொண்டிருந்த லாண்ட் மாஸ்ரரின் பின்னால் சென்று மோதித் தள்ளி விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்துத் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.




